’சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல’ விஜயை சீண்டும் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜயின் பெயரை குறிப்பிடடால், அவரை விமர்சித்துள்ளார். வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் ஆள் நான் இல்லை என குறிப்பிட்டார்.

’சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல விஜயை சீண்டும் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின்

Updated On: 

26 Sep 2025 18:12 PM

 IST

சென்னை, செப்டம்பர் 26 : நான் வெறும் சனிக் கிழமை மட்டும் வெளியே வருபவ அல்ல என்றும் ஞாயிற்றுக் கிழமை கூட வெளியே சுத்திட்டு தான் இருப்பேன் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் உதயநிதி ஸ்டாலின் அவரை விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமைகளில் மட்டும் இரண்டு மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் தனது பரப்புரையை தொடங்கிய விஜய், நாளை (செப்டம்பர் 26) கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

பரப்புரை மேற்கொள்ளும் எல்லாம் இடங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம் மேற்கொள்வதை திமுக மற்றும் மற்ற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது எனவும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார். அதாவது, உங்களை சந்திக்க வரும்போது தொந்தரவு இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளாக பார்த்து பரப்புரையை திட்டமிட்டுள்ளோம் என கூறியிருந்தார்.

Also Read : நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்

’சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல’

இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விஜயை விமர்சித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  துணை முதல்வர் ஸ்டாலின், ” பல மாவட்டங்களுக்கு நான் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வெளியூரில் இருந்து இருப்பேன். சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வரும் ஆள் நான் இல்லை. ஞாயிற்று கிழமை கூட வெளியே சுத்திட்டு தான் இருப்பேன்.

இன்றைக்கு என்ன கிழமை கூட எனக்கு தெரியவில்லை” என மறைமுகமாக விஜயின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். விஜய் அனைத்து மேடைகளிலும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி என விமர்சித்து வருகிறார்.  மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக vs தவெக கட்சிகளுக்கு இடையே போட்டி என திட்டவட்டமாக கூறி வருகிறார்.

Also Read : இனி சண்டேவும் பிரச்சாரம் இருக்கு.. 2026 பிப்ரவரி வரை விஜயின் மாஸ்டர் பிளான்..

இப்படி திமுகவை அனைத்து  இடங்களில் விமர்சிக்கும் விஜய்க்கு  அமைச்சர்கள் பலமுறை பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், உதயநிதி விஜயின் பேச்சுக்கு பெரியளவில் ரியாக்ஷன் கொடுத்ததே இல்லை. இந்த நிலையில், விஜயை முதல்முறையாக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.