AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

” உங்க அப்பாவ காணோம் “? சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக்கதை..

நக்கலாகவும், நையாண்டியாகவும் பேச எங்களுக்கும் தெரியும் என்பதைச் சொல்லவே இந்தக் கதையை கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், "தமிழக வெற்றிக் கழக அரசு, எதிர்க்கட்சிகளின் வீணான சலசலப்புகளுக்கு பதில் அளிக்காமல் அமைதி காப்பது அச்சத்தினால் அல்ல என சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசி இருந்தார்.

” உங்க அப்பாவ காணோம் “? சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக்கதை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Jun 2026 14:59 PM IST

ஜூன் 23, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவுபெறுகிறது. இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பதிலுரை இடம்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை எந்த செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெறாத நிலையில், இன்றைய பதிலுரையில் என்னென்ன இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து அவர் பல கருத்துகளை முன்வைத்தார்.

குறிப்பாக, தனது பாணியில் ஒரு “குட்டிக்கதை”யையும் கூறினார். அந்தக் கதை எதிர்க்கட்சியை மறைமுகமாகச் சாடும் வகையில் அமைந்திருந்தது. சட்டப்பேரவை அவையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே டாஸ்மாக், கட்சி நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக்கதை:

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் தனது வழக்கமான “குட்டிக்கதை” பாணியில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருந்ததால், கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு நடந்து சென்றார். அவர் எதையோ தேடிச் செல்வது போல் இருந்தது. அப்போது அருகில் இருந்த ஒரு சிறுவன், ‘என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ‘உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க; அதான் தேடிட்டு இருக்கேன். உங்க அப்பா எங்கே?’ என்று கேட்டாராம்.”

நக்கலாக எங்களுக்கும் பேச தெரியும்:

நக்கலாகவும், நையாண்டியாகவும் பேச எங்களுக்கும் தெரியும் என்பதைச் சொல்லவே இந்தக் கதையை கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், “தமிழக வெற்றிக் கழக அரசு, எதிர்க்கட்சிகளின் வீணான சலசலப்புகளுக்கு பதில் அளிக்காமல் அமைதி காப்பது அச்சத்தினால் அல்ல. மக்கள் தந்த ஆட்சியை பொறுப்புடன் நடத்த வேண்டும் என்ற நிதானம்தான் அதற்குக் காரணம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Follow Us