‘சர்ச்சை வேண்டாம்.. வீண் விவாதங்களை தவிர்ப்போம்’ காமராஜர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

Trichy Siva Controversy on Kamarajar : காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த திருச்சி சிவா எம்.பிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொது வெளியில் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சர்ச்சை வேண்டாம்.. வீண் விவாதங்களை தவிர்ப்போம் காமராஜர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

17 Jul 2025 14:37 PM

சென்னை, ஜூலை 17 : காமராஜர் (Kamarajar) குறித்து பொது வெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) பகிர்ந்துள்ளார். திருச்சி சிவா எம்.பி. (Trichy Siva MP) காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்த விஷயம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.

Also Read : 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..

முதல்வர் ஸ்டாலின் சொன்ன விஷயம்


சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்” என குறிப்பிட்டு இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் 2025 ஜூலை 15ஆம் தேதி கொண்டாட்டப்பட்டது.

அனைத்து கட்சி தலைவர்களும் காமராஜருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். அன்றைய நாளில், சென்னை பெரம்பூர் பகுதியில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருச்சி சிவா எம்.பி. காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஓரணியில் தமிழ்நாடு குறித்து ஆலோசனை..

காமராஜர் ஏசி இல்லாமல் இருக்க மாட்டார் எனவும், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கூறியதாக அவர் தெரிவித்தார். திருச்சி சிவாவின் இந்த கருத்துக்கு பாஜக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.