ஏப்.15-க்குள் பதில் அளிக்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக வலியுறுத்தல்!
BJP Challenges Tamil Nadu CM MK Stalin | ஏப்ரல் 15, 2026 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோயிலுக்கு வருவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் கேள்விகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்ரல் 13 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) ஏப்ரல் 15, 2026 அன்று நாகர்கோயிலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரமதரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லியும், விமர்சனங்களை முன்வைத்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், திராவிட முன்னேற்ற கழகம் பாஜக குறித்து தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ் – என்ன நடந்தது?
மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் – பாஜக செய்தி தொடர்பாளர்
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தீய சக்தி திமுகவை கடலில் கரைத்து பெருங்காயமாக மாற்றும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகத்திற்கு செய்த சாதனைகளை படித்து பார்த்து பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு துணிவிருந்தால் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : NDA வேட்பாளருக்கு ஆதரவு.. தேர்தல் களத்தை அதிர வைக்க வரும் 6 துருவங்கள்.. பாஜக தலைமை போட்ட மாஸ்டர் பிளான்!
ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசு மீதும் பொய்களை கூறி அவதூறு பிரசாரம் செய்யும் மு.க.ஸ்டாலின், பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை ஏன் பதில் அளிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோயிலுக்கு ஏப்ரல் 15, 2026 அன்று வருவதற்குள் பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.