AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம்!

Gold and Silver Price In Chennai | ஈரான் போர் காரணமாக தங்கம், வெள்ளி கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Apr 2026 10:49 AM IST

சென்னை, ஏப்ரல் 13 : ஈரான் போருக்கு (Iran War) மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போரால் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம்

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக புவிசார் பதற்றங்கள் அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை என உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. மேலும் ஈரான் போர் குறித்த முடிவு எட்டப்படாத நிலையில், தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இவ்வாறு அசாத்தியமான சூழல் நிலவும் நிலையில், தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.10,900 கோடி.. உங்கள் பணத்தை எடுக்க இது கட்டாயம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இதேபோல கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us