டபுள் எஞ்சின் அரசு ஏன் மணிப்பூரை காப்பற்றவில்லை? – பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி

MK Stalin Questions PM Modi : தஞ்சாவூரில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிர் அணி மாநாடு ஜனவரி 26, 2026 அன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்தார்.

டபுள் எஞ்சின் அரசு ஏன் மணிப்பூரை காப்பற்றவில்லை? - பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published: 

26 Jan 2026 19:15 PM

 IST

தஞ்சாவூர், ஜனவரி 26 : தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள் – டெல்டா  மாநாடு ஜனவரி 26, 2026 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்தார். மத்தியில் ஆட்சி நடத்தும் டபுள் எஞ்சின் அரசு ஒரு பழுதடைந்த எஞ்சின் என்றும், அந்த அரசு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வர் விமர்சனம்

நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர், நீதிக்கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை இயற்றினார்.  தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, நான் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பிரதமர் பழைய பேச்சையே பேசி சென்றிருக்கிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்து பேசாமல், தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றார்.

திமுக மகளிரணி மாநாடு குறித்து முதல்வரின் பதிவு

 

இதையும் படிக்க : பாஜக கூட்டணியில் பாமக – தேமுதிக…நயினார் நாகேந்திரன் அடித்த டிவிஸ்ட்!

மேலும் பேசிய அவர், மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஏற்பட்ட வன்முறைகளில் அரசு கணக்குப்படி 260 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியிலும் மணிப்பூரிலும் ஆட்சி செய்யும் டபுள் எஞ்சின் அரசு மக்களை காப்பாற்றத் தவறிவிட்டது. பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் நாட்டிற்குள் பரவுகிறது என்ற நம்பகமான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பிரதமர் அவற்றை கவனிக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : குடியரசு தினம்:ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்…நிகழ்ச்சி நிரல் இதோ!

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசிய முதல்வர், தோல்வியடைந்த கூட்டணிக்கு பிரதமர் செயற்கையாக பில்ட்அப் கொடுத்து வருகிறார். கடந்த 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் அந்த கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. எத்தனை வேடங்களில் வந்தாலும் மக்கள் அவர்களை நிராகரித்துள்ளனர்.  வரவிருக்கும் தேர்தல்,  தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும். என் மீது உள்ள நம்பிக்கையை விட தமிழ்நாட்டு மக்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளதாக கூறினார். முதல்வரின் விமர்சனம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?