Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடியரசு தினம்:ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்…நிகழ்ச்சி நிரல் இதோ!

Chennai Republic Day: சென்னையில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளதை இந்தப் பதிவில் காணலாம்.

குடியரசு தினம்:ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்…நிகழ்ச்சி நிரல் இதோ!
சென்னையில் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர் ஆர் என் ரவி
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 26 Jan 2026 06:41 AM IST

நாடு முழுவதும் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 26) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் தமிழக காவல்துறை, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். இந்த விழாவுக்காக, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் உள்ள, உழைப்பாளர் சிலை அருகே தமிழக அரசு சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குடியரசு தின அணிவகுப்பு – வந்தே மாதரம் 150 ஆண்டு விழா… வேற என்ன ஸ்பெஷல்?

குடியரசு தின நிகழ்ச்சி நிரல்

  • குடியரசு தின விழாவுக்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை காலை 7:30 முதல் 8 மணிக்குள் விழா மேடைக்கு வருகை தருகின்றனர்.
  • காலை 8 முதல் 8:15-க்குள் ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
  • பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
  • காலை 8:15 முதல் 9 மணிக்குள் முப்படை, காவல் துறை மற்றும் என்.சி.சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது.
  • காலை 9 மணி முதல் 9:30 மணிக்குள் சிறந்த காவல் அதிகாரிகள் மற்றும் சாதனையாளர்கள், வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
  • காலை 9:30 முதல் 10 மணிக்குள் தமிழக கலைஞர்கள், வெளிமாநில கலைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் (காவடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது).
  • காலை 10 முதல் 10:15 மணிக்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசு தின நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

போலீசாரின் கட்டுப்பாட்டில் சென்னை

இந்த விழாவுக்காக சென்னை முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை பகுதியில், 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, சென்னை விமான நிலையம், சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள், பலூன்கள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதும் இருக்கிறதா என்பது தொடர்பாக போலீசார் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: Padma Awards 2026: தமிழ்நாட்டில் 13 பத்ம விருதுகள்.. ஒட்டுமொத்தமாக 131 பேர்.. முழு விவரம் இதோ!