Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடியரசு தின சிறப்பு பேரணிக்கு இதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது.. லிஸ்ட் இதோ!

Republic Day Special Parade | குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கர்தவ்யா மைதானத்தில் சிறப்பு பேரணி நடைபெற உள்ளது. இந்த நிலையில், குடியரசு தின சிறப்பு பேரணியில் சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Jan 2026 14:45 PM IST
இந்தியா தனது 77வது சுதந்திர தின விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜனவரி 26, 2026 அன்று டெல்லியில் உள்ள கர்தவ்யா மைதானத்தில் குடியரசு தின சிறப்பு பேரணி நடைபெற உள்ளது. 

1 / 5
இந்த சிறப்பு பேரணியை பார்வையிட உலக அளவில் இருந்து சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சிறப்பு பேரணியை காண செல்பவர்கள் என்ன என்ன பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

2 / 5
குடியரசு தின பேரணியை காண செல்லும் நபர்கள் கத்தி, கத்தரிக்கோல், பிளேடு, நகம் வெட்டி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதேபோல  சிகரெட், பீடி, குட்கா, மது உள்ளிட்ட எந்த விதமான போதைப் பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. 

3 / 5
தீப்பெட்டி, லைட்டர் உள்ளிட்ட எரியக்கூடிய் மற்றும் எரிய வைக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பெரிய கை பைகள், தோல் பைகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

4 / 5
இதுதவிர பேரணி நடைபெறும் இடத்தில் ட்ரோன், கேமராக்கள் மற்றும் மற்ற வீடியோ எடுக்க பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே குடியரசு தின பேரணியை நேரில் பார்வையிட உள்ள நபர்கள் இந்த விதிகளை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5