AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

77வது குடியரசு தின விழா.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த பகுதியில்?

Republic Day - Chennai Traffic Diversion: பெருநகர சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நமது குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற 26.01.2026 அன்று உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி கீழ்க்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

77வது குடியரசு தின விழா.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த பகுதியில்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jan 2026 07:25 AM IST

சென்னை, ஜனவரி 24, 2026: நாடு முழுவதும் 77-ஆவது குடியரசு தினம் வரக்கூடிய திங்கட்கிழமை, அதாவது 26 ஜனவரி 2026 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான அணிவகுப்பு பயிற்சிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சூழலில், சென்னையில் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடி ஏற்ற உள்ளார். அதேபோல், காமராஜர் சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசு தின விழா:

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் காமராஜர் சாலையில் கலை நிகழ்ச்சிகள், முப்படை அணிவகுப்புகள், காவல்துறை, தீயணைப்புத் துறை, குதிரைப் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள். அதுபோல இந்த அணிவகுப்பு மரியாதையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றுக்கொள்வார்.

குடியரசு தின விழாவையொட்டி காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நமது குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற 26.01.2026 அன்று உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி கீழ்க்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்”.. இபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி!!

போக்குவரத்து மாற்ற விவரங்கள்:

  1. மேற்கண்ட தினத்தில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

  2. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலை வழியாக பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தானந்தூன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கௌடியாமடம் ரோடு, இராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

  3. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலை வழியாக பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பி விடப்பட்டு, இராயபேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கௌடியாமடம் ரோடு, இராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

  4. மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இராயபேட்டை நெடுஞ்சாலையில் வந்து, ராயபேட்டை 1 பாயிண்டில் இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கௌடியாமடம் சாலை, இராயபேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

  5. டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

  6. டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் ஹவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

  7. பாரதி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

  8. வாலாஜா சாலையிலிருந்து உழைப்பாளர் சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.

  9. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையம் அருகே மாற்றப்படும்.

  10. பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல், வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணா சிலை, ஜி.பி. ரோடு, இராயபேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி. ராமன் சாலை), ஐஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு வழியாக (இடது அல்லது வலது) திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்களின் இலக்கை சென்றடையலாம்.

  11. அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாயிண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

Follow Us