Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடியரசு தின அணிவகுப்பு – வந்தே மாதரம் 150 ஆண்டு விழா… வேற என்ன ஸ்பெஷல்?

Republic Day Parade : 77வது குடியரசு தின அணிவகுப்பு விழா இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகள் நிறைவை மையமாக கொண்டு, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புத் திறன், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பான கலவையாக அமைவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு – வந்தே மாதரம் 150 ஆண்டு விழா… வேற என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Jan 2026 19:03 PM IST

77வது குடியரசு தின விழாவின் (Republic Day 2026) அணிவகுப்பு நிகழ்ச்சி இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகள் நிறைவை மையமாக கொண்டு, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புத் திறன், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பான கலவையாக அமைவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையேற்று நடத்துகிறார். குடியரசு தின அணிவகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும். விழாவுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், குடியரசுத் தலைவர் பாரம்பரிய தேசியக் கொடியை ஏற்றவிருக்கிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 100 கலைஞர்கள் இசை நிகழ்ச்சியுடன் அணிவகுப்பை தொடங்கி வைப்பார்கள். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அணிவகுப்பின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமார் செயல்படுகிறார். பரம்வீர் சக்கரம் மற்றும் அசோக சக்கரம் பெற்ற வீரர்கள் அணிவகுப்பில் சிறப்பு இடம் பெறுகிறார்கள்.

இதையும் படிக்க : குடியரசு தின சிறப்பு பேரணிக்கு இதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது.. லிஸ்ட் இதோ!

இந்த ஆண்டு முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய படை அணிவகுப்பில் பங்கேற்கிறது. இந்திய ராணுவத்தின் சார்பில் 61 குதிரைப்படை, உயர் இயக்கத் திறன் கொண்ட ரெக்கி வாகனங்கள், T-90 பீஷ்மா மற்றும் அர்ஜுன் டேங்க், நாக் ஏவுகணை அமைப்பு, சிறப்பு படைகள், ரோபோ நாய்கள், ஆளில்லா வாகனங்கள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு உபகரணங்கள் இடம்பெறுகின்றன. பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை, சூர்யாஸ்திரா உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு சாதனங்கள் இந்தியாவின் ஆத்மநிர்பர் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன.

வலுவான கடற்படை – வலுவான நாடு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்திய கடற்படை அணிவகுப்பில் 144 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஐஎன்எஸ் விக்ராந்த், நீலகிரி வகை ஃபிரிகேட்டுகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ஜிசாட் – 7ஆர் செயற்கைக்கோள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இந்திய விமானப்படை அணிவகுப்புடன், ரஃபேல், சுகோய், மிக்-29, ஜாகுவார் உள்ளிட்ட 29 விமானங்கள் கொண்ட வான்வழி பறக்கும் காட்சி இடம்பெறுகிறது.

இதையும் படிக்க : Republic Day Parade 2026 : குடியரசு தின அணிவகுப்புக்கு தயார் நிலையில் டெல்லி.. நேரலை விவரங்கள் இதோ!

இந்த அணி வகுப்பில் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஒருங்கிணைந்த வலிமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறவுள்ளது. அனைத்து மகளிர் இந்திய கடற்கரை காவல்படை, டிஆர்டிஓ உருவாக்கிய ஹைப்பர்சோனிக் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகியனவும் அணிவகுப்பில் இடம் பெறுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் மொத்தம் 30 வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

மேலும், 2,500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் பண்பாட்டு நிகழ்ச்சி, பைக் சாகசக் காட்சிகள், தேசிய பள்ளி இசைக்குழு போட்டி வெற்றியாளர்களின் நிகழ்ச்சி உள்ளிட்டவை விழாவை மேலும் சிறப்பாக்குகின்றன. மேலும், 10,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில்முனைவோர், சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விழாவின் முடிவில் தேசிய கீதம் முழங்க, ‘வந்தே மாதரம்’ பதாகையுடன் பலூன்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன. இந்தியாவின் பாரம்பரியம், வீரம், வளர்ச்சி மற்றும் மக்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நிகழ்வாக குடியரசு தின அணிவகுப்பு 2026 அமைவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.