Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Budget 2026 : இந்தியாவின் முதல் பட்ஜெட் எப்போது? யாரால் தாக்கல் செய்யப்பட்டது?

India’s First Budget : இந்திய நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முதல் பட்ஜெட் எப்போது யாரால் தாக்கப்பட்டது தெரியுமா? அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Budget 2026 : இந்தியாவின் முதல் பட்ஜெட் எப்போது? யாரால் தாக்கல் செய்யப்பட்டது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Jan 2026 16:41 PM IST

இந்திய நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் (Budget) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் (Nirmala Sitharaman) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது தொடர்பாக பலரும் தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பட்ஜெட் வரலாறு குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. இன்றைய பட்ஜெட்கள் பொதுமக்களின் நலன், சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவின் முதல் பட்ஜெட் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் உருவானதாக வரலாறு கூறுகிறது. முதல் பட்ஜெட் எப்போது? யாரால் தாக்கல் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் முதல் பட்ஜெட்

இந்தியாவில் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாள் ஏப்ரல் 7, 1860. அந்த காலகட்டத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் அப்போது இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவர். கடந்த 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் பின்னணியில், பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. இன்றைய பட்ஜெட்களைப் போல மக்கள் நலன் இதில் முக்கிய இடம் பெறவில்லை; மாறாக, பிரிட்டிஷ் அரசு நிர்வாகத்தின் செலவுகள் மற்றும் வருவாய் ஆகியவை பட்ஜெட்டின் மையமாக இருந்தது.

இதையும் படிக்க : நிதி சுதந்திரத்தை அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயம்.. என்ன என்ன?

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், நாட்டின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்தவர், அப்போது இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த சர் ஆர்கே சண்முகம் செட்டி. இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை காரணமாக கலவரங்கள், பொருளாதார நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாடு எதிர்கொண்டிருந்தது.

புதிய நிதியாண்டு 1948 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவிருந்ததால், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக கருதப்பட்டது. இருப்பினும், புதிதாக உருவான இந்திய நாட்டின் நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதில் இந்த பட்ஜெட் முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டின் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், 1948 செப்டம்பர் வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் ஒரே நாணயத்தை பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நிலையில் இருந்ததால், முழுமையான பொருளாதார பிரிவு உடனடியாக சாத்தியமில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

இதையும் படிக்க : வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்.. ரூ.1,14,000-க்கு விற்பனை.. ஷாக்கில் சாமானியர்கள்!

வருவாய் மற்றும் பற்றாக்குறை

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில், மொத்த வருவாய் 171.15 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. அதே நேரத்தில், 204.59 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. வளங்கள் குறைவாக இருந்தபோதிலும், நிர்வாகம், அகதிகள் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பட்ஜெட் வரலாறு, காலனித்துவ ஆட்சியின் தேவைகளில் இருந்து மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஜனநாயக செயல்முறையாக வளர்ந்து வந்துள்ளதற்கான சான்றாக திகழ்கிறது.