AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Plus 2 result Date: நாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – வாட்ஸ்அப்பில் ரிசல்ட் பார்க்கலாம்

Plus 2 Results : தமிழ்நாட்டில் மே 8, 2026  நாளை காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளதாக  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  இந்த முடிவுகளை நாம் எப்படி தெரிந்து கொள்வது உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu  Plus 2 result Date: நாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – வாட்ஸ்அப்பில் ரிசல்ட் பார்க்கலாம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 May 2026 19:35 PM IST

சென்னை, மே 7 : தமிழ்நாட்டில் மே 8, 2026  நாளை காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளதாக  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2, 2026 முதல் மார்ச் 26, 2026 வகை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6, 2026 முதல் கடந்த ஏப்ரல் 2020 வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வழக்கத்தை விட தாமதமாக வெளியாகலாம் என கூறப்பட்டது. இதற்கிடையில் தேர்தல முடிவுகள் வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு பக்கம் தவெக ஆட்சியமைக்க அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடிவருகிறது. இதன் காரணமாக பிளஸ் 2 ரிசல்ட் இன்னும் தாமதமாகலாம் என கூறப்பட்டது.

இதையும் படிக்க : மாணவர்களே தயாரா? அரசு கலை கல்லூரிகளில் சேர மே 29 வரை வாய்ப்பு: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

வாட்ஸ்அப்பில் தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் தான் தேர்வு முடிவுகள் மே 8, 2026 நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் மே 7, 2026 அன்று வெளியிட்டார். இதனையடுத்து சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முதல் முறையாக வாட்ஸ்அப்பிலும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இதற்கு மாணவர்கள் தங்கள் துறை மற்றும் வகுப்பு விவரம் உள்ளிட்டவற்றை 78452 52525 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தித் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.  தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களைக் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம். தேர்வு முடிவுகளை tnresults.nic.in  மற்றும் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும்.  மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : படிப்படியாக குறையும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை…

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Follow Us