Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூட்டணியில் சலசலப்பு.. திடீரென டெல்லி விரையும் நயினார் நாகேந்திரன்.. முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!

Nainar Nagendran Delhi Visit : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.

கூட்டணியில் சலசலப்பு.. திடீரென டெல்லி விரையும் நயினார் நாகேந்திரன்.. முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!
நயினார் நாகேந்திரன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 11 Sep 2025 07:41 AM IST

சென்னை, செப்டம்பர் 11 : அதிமுக பாஜக கூட்டணியில் (AIADMK BJP Alliance) நிலவி வரும் குழப்பத்திற்கு மத்தியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று டெல்லி விரைகிறார். டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குடியரசு துணைத் தலைவராக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்திக்க உள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயார்ப்படுத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால், கட்சியை பலப்படுத்தும் பணியில் அனைத்து தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி அமைந்ததில் இருந்தே சலசலப்புகள் இருந்து வருகிறது.

ஒருபக்கம் அதிமுகவில் குழப்பங்கள் இருந்தாலும், பாஜக கூட்டணியிலும் சலசலப்பு இருந்து வருகிறது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். தனக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் தமிழகம் வரும் அமித் ஷா, பிரதமர் மோடி தன்னை சந்திக்க அனுமதி வழங்கவில்லை எனவும் கூறி, கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அறிவித்தார்.

Also Read : ’நான் எப்படி காரணம்.. புரியவில்லை’ டிடிவி தினரகன் குற்றச்சாட்டு நயினார் நாகேந்திரன் பதில்

திடீரென டெல்லி விரையும் நயினார் நாகேந்திரன்

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று அவரின் செயல்பாடுகள் நன்றாக இல்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு நயினார் நாகேந்திரன், நான் எப்படி காரணமாக இருக்க முடியும் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியும் விலகுவது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், அதிமுகவில் இருந்து அனைத்து பதவிகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், அதிமுக ஒன்றிணைக்க மூன்று முன்னாள் அமைச்சர்களும் குரல் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. இப்படியாக அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வருகிறது. அதிமுகவை பாஜக, ஆர்எஸ்எஸ் உடைக்க பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read : ’நயினார் நாகேந்திரன் சரியில்ல’ கூட்டணி விவகாரத்தில் தினகரன் பகீர் குற்றச்சாட்டு

இப்படியான சூழலில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று டெல்லி புறப்படுகிறார். டெல்லி செவ்லும் அவர், அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தவைர்களை சந்திக்க உள்ளார். அப்போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாஜக கூட்டணியில் நடக்கும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.