தமிழக இடைக்கால பட்ஜெட் எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்? வெளியான தகவல்
TN Budget 2026 : தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026, வரும் பிப்ரவரி 20 அன்று தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிப்ரவரி 20, 2026 அன்று தமிழக சட்டமன்றம் கூடும் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து வெளியான தகவல்
சென்னை, ஜனவரி 31 : தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026, வரும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிப்ரவரி 20, 2026 அன்று தமிழக சட்டமன்றம் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இது, ஆளும் திமுக அரசின் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் அதிக சலுகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளதால், தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பின்னணியில், 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நான்கு முனை போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக இடைக்கால பட்ஜெட் எப்போது?
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5, 2026 அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 20, 2026 அன்று தமிழக சட்டப்பேரவை கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இருப்பினும், இது இந்த ஆட்சிகாலத்தில் வெளியாகும் திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், அரசியல் முக்கியத்துவம் அதிகம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
இந்த இடைக்கால பட்ஜெட்டில், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்க மக்கள் ஆகிய பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் சலுகைகள், நலத்திட்ட அறிவிப்புகள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 அரசியல் ரீதியாகவும், தேர்தல் நோக்கிலும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியில் இருக்கின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, அமமுக, அன்புமணியின் பாமக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்துள்ளன. அதே போல திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இணைந்து களம் காண்கின்றன. தற்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் அடுத்த சில வாரங்களுக்கு தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!
இதனையடுத்து அனைத்து அரசியல் கட்களும் வேட்பாளர் தேர்வு, பிரச்சார பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெக மற்ற கட்சிகளுக்கு இணையாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி வாரியாக வெற்றித் திட்டங்களை வகுக்கும் வகையில்,