போதைப் பொருள் வழக்கில் திரைப்பட நடிகை உட்பட 9 பேர் கைது – கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சி

Actress arrested in drug case : மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகை உட்பட 9 பேர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 9 பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வழக்கில் திரைப்பட நடிகை உட்பட 9 பேர் கைது – கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சி

போதைப்பொருள் வழக்கில் நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது

Published: 

06 Feb 2026 17:55 PM

 IST

சென்னை, பிப்ரவரி 6 : போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை கைது

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் தான் தனக்கு இந்த போதைப்பொருளை வழங்கினார் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வெங்கடேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. காரணம் பிரபல திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா என்பவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அஞ்சு கிருஷ்ணா ஓம் வெள்ளிமலை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிக்க : மாமனார், மாமியாருடன் சண்டை.. கைக்குழந்தையுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!! இன்ஸ்டாவில் கடைசி வீடியோ!

அவருடன் சேர்ந்து தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடிக்கும் வின்சி என்ற நிவேதா, பெரியபணிச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த யஷ்வந்த், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அல்பவின்ஷா, சென்னை மன்னடியை சேர்ந்த தமீம் நிஸ்வான் ஆகிய 9 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணைக்கு பிறகு அவர்கள் அனைவரையும் புழல் மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழ் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பால் அதிர்ச்சி

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் 9 செல்போன்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதே போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் தகைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். மீண்டும் ஒரு திரைப்பட நடிகை போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழ் திரையலக வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறு… சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் குறித்து தேமுதிக புகார்
மாறிய ஸ்கேன் ரிப்போர்ட்… வயிற்று வலிக்காக சென்ற பாட்டிக்கு நேர்ந்த கொடுமை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
“பேஸ்மென்ட் வீக் -பில்டிங் ஸ்டிராங்.. ஆட்டம் காணும் திமுக ஆட்சி”.. இபிஎஸ் கடும் விமர்சனம்!!
அதிமுக பிரமுகருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு…ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க பிரிந்த உயிர்..பரபரப்பில் மதுரை!
சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்துவதில் சிக்கல்.. தவெகவினர் மனு நிராகரிப்பு
சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்