பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!

Suruli Falls Tourist Spot: தமிழகத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவி சிறந்து சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த சுற்றுலா தலத்துக்கு குறைந்த பட்ஜெட்டில் ஒன்டே ட்ரிப்புக்கு சென்று வரலாம். இதுகுறித்த முழு விவரம் இதோ.

பசுமை காடுகளுக்கு மத்தியில் குட்டி குற்றாலம்.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!

சுருளி நீர் வீழ்ச்சி சுற்றுலா தலம்

Updated On: 

10 Mar 2026 13:23 PM

 IST

தமிழகம்- கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. கம்பம் அருகே அமைந்துள்ள இந்த அருமையான சுருளி அருவியானது சுமார் 150 அடி உயரத்தில் இருந்து விழும் அழகிய நீர் வீழ்ச்சியாகும். இங்கு வரும் நீரானது மேகமலையிலிருந்து உற்பத்தி ஆகி வருகிறது. இந்த அருவியில் நீராடினால் திரும்பிப் போவதற்கு மனம் இல்லாமல் மாறிவிடும் என்பதற்கேற்ப அவ்வளவு ரம்யமாக அமைந்திருக்கும். இந்த அருவி பகுதியானது சுற்றுலாத்தலமாக மட்டுமின்றி ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்குள்ள இயற்கை அழகுகள் ஒப்பிட முடியாத அளவுக்கு நிறைந்து காணப்படுகிறது. எனவே, இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த சுருளி அருவியில் உள்ளம் குளிர குளித்து குத்தாட்டம் போடலாம். இந்த அருவியை சுற்றி பசுமையான மரம், செடி, கொடிகள் சூழ்ந்து காணப்படும்.

பசுமை நிறைந்த காடுகளுக்கு மத்தியில் சுருளி அருவி

கம்பம் பகுதியில் இருந்து பச்சை வண்ண போர்வை போர்த்தியது போல காணப்படும் வயல் வெளிகள், திராட்சை தோட்டங்கள், தென்னை தோப்புகளுக்கு மத்தியில் சுமார் 9 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் குட்டி குற்றலாம் என்று அழைக்கப்படும் சுருளி அருவியை சென்றடையலாம். அங்கிருந்து, ஓங்கி உயர்ந்த மரங்களுடன் அடர்ந்து வளர்ந்திருக்கும் காடுகளுக்குள் சிறிது தூரம் நடந்து சென்றால் சுருளி அருவியை அடையலாம்.

மேலும் படிக்க: கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியான சுற்றுலா தலம்… தென்தமிழகத்தின் சொர்க்கம்… பரபரப்பான வாழ்வில் இருந்து இளைப்பாற இங்க போங்க!

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மையப்புள்ளி

இந்தப் பகுதியில் உள்ள சுருளி மலைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தலமாகவும், உலகின் மிகவும் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. இதனால் இந்த பகுதி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு மைய புள்ளியாகவும் இருந்து வருகிறது. இந்த பகுதியில், அவ்வப்போது காட்டு யானைகள் நடமாட்டமும் காணப்படும். இதனால், இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் காடுகளுக்கு நடுவேயும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் சுற்றுலா செல்லும் ஒரு தனித்துவமான அனுபவத்தை பெறுவது உறுதியாகும்.

பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற சுருளி அருவி

இந்த பகுதியில், கைலாசநாதர் குகை கோவில், பூத நாராயணர் கோவில், சுருளி வேலப்பர் கோயில் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் நபர்களும் தாராளமாக சுற்றுலா சென்று வரலாம். தேனியில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருமையான சுருளி அருவிக்கு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சென்றடையலாம். அதுவும் கோடை காலத்தில், குறைந்த பட்ஜெட்டில், ஒன்டே ட்ரிப்புக்கு ஏற்ற இடமாக சுருளி அருவி விளங்கி வருகிறது. தேனி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு ஒரு முறை சுற்றுலா சென்று வரலாம்.

மேலும் படிக்க: நெருங்கி வரும் கோடை விடுமுறை.. ஊட்டி மலை ரயில் குறித்து குளு குளு அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
சென்னை எழும்பூரில் வரப்போகுது மெகா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்… எப்போது தெரியுமா?
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..