AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல், டெங்கு பாதிப்பு.. மாநகராட்சி சார்பில் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பு!!

Special Medical Camps in Chennai: சென்னையில் பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை, இரத்தப் பரிசோதனை மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல், டெங்கு பாதிப்பு.. மாநகராட்சி சார்பில் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பு!!
காய்ச்சல் முகாம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Oct 2026 12:50 PM IST

சென்னை, அக்.03: சென்னையில் நிலவி வரும் காலநிலை மாற்றம் மற்றும் பருவமழையைத் தொடர்ந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல், சளி மற்றும் டெங்கு போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டு வருகிறது. இந்தச் சூழலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி நோய் பரவலைத் தடுக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

இதையும் படிக்க: பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்.. மீறி தொல்லை செய்தால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி!!

109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்:

காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் மொத்தம் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தகுதிவாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் வரும் பொதுமக்களுக்கு இலவசப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தேவையான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன.

இரத்தப் பரிசோதனை மற்றும் களப்பணிகள்:

மருத்துவ முகாம்களுக்கு வரும் நோயாளிகளில் தொடர்ந்து காய்ச்சல் நீடிக்கும் நபர்களுக்கு, டெங்கு அல்லது பிற ரத்த தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய உடனடி ரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், காய்ச்சல் பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி, வீடுகள் தோறும்ச் சென்று காய்ச்சல் கண்டறியும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கொசு ஒழிப்பு மற்றும் தீவிரக் கண்காணிப்பு:

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் வகையில், முகாம்கள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும், நன்னீர் தேங்கும் இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் இடங்களை உடனடியாகச் சீரமைக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகும் மூலங்களை அழிக்கவும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :“நடிப்புல சரோஜா தேவியவே மிஞ்சிட்டாங்க!”.. சத்யபாமாவை கலாய்த்து தள்ளிய சீமான்!

சுகாதாரத் துறையின் அவசர அறிவுறுத்தல்:

பொதுமக்களுக்குக் காய்ச்சல் அல்லது உடல்நலக் குறைவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாமையோ, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுக வேண்டும் என்றும், கடைகளில் நேரடியாக மாத்திரைகளை வாங்கிச் சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், திறந்தவெளிகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us