வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் சிறப்பு முகாம் – முழு விவரம் உள்ளே..
SIR - Special Camp: இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால் படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் முறை வாக்காளர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இதற்கான சிறப்பு முகாம் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 3, 2025: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்றன. டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடக்கம் முதலே இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
SIR பணிகளுக்கு பின் நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்கள்:
இந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை ஆறு கோடிக்கும் கீழ் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும் படிக்க: கொடைக்கானலில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்த நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, இரட்டை வாக்குப் பதிவுகள் இருப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால் படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் முறை வாக்காளர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இதற்கான சிறப்பு முகாம் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் – இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்:
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், முதல் இரண்டு நாட்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 29ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களான கடைசி இரண்டு நாட்கள் இன்று மற்றும் நாளை நடைபெறுகின்றன.
மேலும் படிக்க: ஒரு சிலரின் சுயநலம்.. அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் – ஜோதிமணியின் பரபரப்பு பதிவு..
தமிழகம் முழுவதிலும் உள்ள 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தற்போது வரை புதியதாக பெயர் சேர்க்க 7 லட்சத்து 37 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் முகாமினைப் பயன்படுத்தி, பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு நாள் சிறப்பு முகாமில் கூடுதல் வாக்காளர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.