Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIR: வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?

SIR: எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி அளித்தவர்கள், நீங்கள் கொடுத்த விண்ணப்ப படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதா? அப்படி பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டதா? என்பதை தேர்தல் ஆணைய இணைய பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SIR: வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?
எஸ்ஐஆர் படிவம் சரிபார்ப்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Dec 2025 14:46 PM IST

சென்னை, டிசம்பர் 11: பீகாரைத் தொடர்ந்து கடும் எதிர்ப்பை மீறி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள், டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது உள்ளிட்ட காரணங்களால் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒருவாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பி, திரும்ப அளிப்பதற்கு இன்றே (டிசம்பர் 11) கடைசி நாளாகும்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, தகுதியான பட்டியலாக மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக, விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களில் 99.55% படிவங்கள் நேற்றைய நிலவரப்படி, பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இதில் இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்ஐஆர் படிவங்கள் திரும்பி அளிக்க இன்று கடைசி நாள்:

தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில்,நேற்றைய நிலவரப்படி (நவம்பர் 11) தமிழகத்தில் 6,40,84,624 எஸ்ஐஆர் படிவங்கள் (99.95%) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 6,38,25,877 படிவங்கள் (99.55%) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் 2,88,710 படிவங்களே உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், மீதமுள்ளவர்களும் படிவங்களை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்படி, எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பி, திரும்ப அளிப்பதற்கு இன்றே (டிசம்பர் 11) கடைசி நாளாகும்.

உங்கள் பெயர் இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?

இந்நிலையில், எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி அளித்தவர்கள், நீங்கள் கொடுத்த விண்ணப்ப படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதா? அப்படி பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டதா? என்பதை தேர்தல் ஆணைய இணைய பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். அதன்படி, https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, 3 வகைகளில் உங்களது பெயர் இடம் பெற்றுள்ளதாக என சரிபார்க்க முடியும். அதில், 2026 என்ற பகுதிக்குச் சென்று செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை EPIC எண் விவரங்களை அளித்து, தங்களது படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளலாம். டிசம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்ய விரும்புவோர் உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க : “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திமுகவின் புதிய பிரசார பயணம் தொடக்கம்!

இதைத்தொடர்ந்து, படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சில மாநிலங்களில் முடிவடையாத நிலையில், மேலும் அவகாசம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.