Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திமுகவின் புதிய பிரசார பயணம் தொடக்கம்!

Dmk My Booth Vetri Polling Booth: திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச் சாவடி பிரசார பயணத்தை சென்னை, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார்.

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திமுகவின் புதிய பிரசார பயணம் தொடக்கம்!
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயணம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 10 Dec 2025 16:06 PM IST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அதிமுக சார்பில் பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதே போல, திமுகவும் புதிய பிரச்சார பயணத்தை இன்று தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற பிரச்சார பயணம் இன்று தொடங்கியது. இந்த பிரச்சார பயணத்துக்கான தொடக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்றது.

பிரசார பயணத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின்

இந்த நிகழ்வில் தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்கு சாவடி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. அதன்படி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது, பூத் கமிட்டி நிர்வாகிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என்பது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. டிச.12ல் வருகிறது மாற்றம்.. அரசு சொன்ன குட் நியூஸ்!!

தனித்தனியாக அழைத்து பேசிய மு. க. ஸ்டாலின்

இதனை பின்பற்றி பொது மக்களை சந்திக்கும் போது எந்த மாதிரியான விஷயங்களை அவர்களிடம் பேச வேண்டும். பொது மக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை முதல்வர் மு. க. ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனை, ஒவ்வொரு நபரையும் தனியாக அழைத்து பொதுமக்களை சந்திக்கும் முறைகள் குறித்து விவரித்தார்.

வீடி வீடாக சென்று பிரசாரம் செய்யும் பணி

மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்குகளை இலக்காக கொண்டு அனைத்து வாக்குகளையும் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார். இந்த பிரசார பயணமானது அனைத்து வாக்குச் சாவடிகளுக்குள்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்தப் பகுதி பொது மக்களிடம் பேசி திமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறி பிரசாரம் செய்வதாகும்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் உற்சாகம்

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக வந்து கள ஆய்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு ஆலோசனைகளும் வழங்கி இருப்பது பூத் கமிட்டி நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை அதிகரித்து உள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் உத்வேகத்துடன் பணிபுரிவதற்கு முதல்வர் ஊக்கம் அளித்ததாக திமுகவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: ஸ்டாலினை கடுமையாக அட்டாக் செய்த எடப்பாடி…அனல் பறந்த பேச்சு!