Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜியோ ஹாட்ஸ்டாருடன் திரைப்படங்களை உருவாக்கும் தமிழக அரசு – ஒப்பந்தம்

Tamil Nadu Partners with Jio Hotstar: தமிழக அரசுடன் இணைந்து திரைப்படம், இணைய தொடர்கள், கண்டென்ட்களை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டாருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  இதற்காக ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் தமிழக அரசு இடையே ரூ.4,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. 

ஜியோ ஹாட்ஸ்டாருடன் திரைப்படங்களை உருவாக்கும் தமிழக அரசு –  ஒப்பந்தம்
உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Dec 2025 20:20 PM IST

சென்னை, டிசம்பர் 9 : தமிழக அரசுடன் இணைந்து திரைப்படம், இணைய தொடர்கள், கண்டென்ட்களை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டாருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  இதற்காக ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் தமிழக அரசு இடையே ரூ.4,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் என்ற நிகழ்ச்சி டிசம்பர் 9, 2025 அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் திரைப்பட மற்றும் ஊடக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வழங்குவது, திரைப்படத்துறையை மேம்படுத்துவது போன்ர நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ரூ.4 கோடியில் ஒப்பந்தம்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டார். இந்நிகழ்வின்போது தமிழக அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர் போன்ற கண்டென்ட்களை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாருடனான ஒப்பந்தம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு

 

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் மொத்தமாக திரைப்டம் மற்றும் வெப் சீரிஸ்கள் தயாரிப்பதற்காக ரூ.12,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4,000 கோடி முதலீடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னைலையில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

‘சினிமாவுக்கு ஓடிடி மாற்றாகாது’

இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நல்ல கருத்துகள் நிச்சயம் மக்களால் கொண்டாடப்படும். அனைவரும் சொல்வது போல உள்ளடக்கம் முக்கியம். சினிமாவுக்கு ஓடிடி மாற்றாகாது. மேலும், மொழி, இனம் தாண்டி, கருத்து சிறந்ததாக இருந்தால், அதற்கு அனைத்து இடத்திலும் வரவேற்பு இருக்கும். இன்றைய காலகட்டங்களில் புதிய தொழில்நுட்பங்களை அனைவரும் கற்றுக்கொள்வது அவசியம். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் இன்று நம்முடன் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் மிகச் சிறந்த உதாரணம். என்றார்.