Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. இனி மழை கிடையாது – வெதர்மேன் சொன்னது என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஓட்டையும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. இனி மழை கிடையாது – வெதர்மேன் சொன்னது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Dec 2025 14:45 PM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 8, 2025: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 8 டிசம்பர் 2025 முதல் 14 டிசம்பர் 2025 வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 7, கமுதி (ராமநாதபுரம்) 4, பாபநாசம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) தலா 3, இளையாங்குடி (சிவகங்கை), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சாத்தூர் (விருதுநகர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மழை இருக்காது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஓட்டையும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதற்கு முன்பு டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து, வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் காரணமாக அதிதீவிர கனமழை பதிவானது. கிட்டத்தட்ட 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியது.

மேலும் படிக்க: இரு இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு…என்ன காரணம்…போலீசார் விசாரணை!

தமிழகத்தில் குளிர்ந்த சூழல் நிலவும் – பிரதீப் ஜான்:


இந்த சூழலில், வருகிற நாட்களிலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அதிக அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குளிர்ந்த வெப்பநிலை காணப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தவெக தலைமையில் புதிய கூட்டணி…டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

அதே சமயம், ஓசூர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். மேலும் வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட நிலை இருந்தாலும் குளிர்ந்த வெப்பநிலை காணப்படும் என தெரிவித்தார்.