Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரு இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு…என்ன காரணம்…போலீசார் விசாரணை!

Two youths sickle: தாம்பரம் அருகே மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த இரு இளைஞர்களை பெண் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இரு இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு…என்ன காரணம்…போலீசார் விசாரணை!
இரு இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Dec 2025 14:11 PM IST

சென்னை, தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இரு இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7 ) மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அந்த இரு இளைஞர்களையும் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது. இந்தச் சம்பவத்தில், அந்த இரு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் தாம்பரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போலீசார் இருவரையும் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல்

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செய்யூரை சேர்ந்த தினேஷ் மற்றும் செப்பியத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பதும், இவர்களை வெட்டியவர்கள் பெண் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் என்பதும் தெரிவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷுக்கும், மற்றொரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்.. அதிர்ச்சி சம்பவம்!

முன்விரோதம் காரணமாக சம்பவம்

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தனது சொந்த ஊரிலிருந்து திருமுடிவாக்கம் பகுதியில் தங்கி இருந்து தினேஷ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த முன் விரோதம் காரணமாக செய்யூரைச் சேர்ந்த தினேஷை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளது. இதேபோல, செப்பியத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரையும் இந்த கும்பல் சரமாரியாக வெட்டி உள்ளது.

6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு

இந்தச் சம்பவத்தில், தொடர்புடையவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களா?. அல்லது வெவ்வேறு கும்பலா என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலையும் வலை வீசி தேடி வருகின்றனர். தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் பகுதியில் இரு இளைஞர்களை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: நடுரோட்டில் பெண் துடிக்க துடிக்க கத்தியால் குத்திக் கொலை…சொத்து பிரச்சனையால் சம்பவம்!