AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராமதாஸுடன் சசிகலா மீண்டும் சந்திப்பு… கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு?

Sasikala Meet Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுடன், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்படுவதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ராமதாஸுடன் சசிகலா மீண்டும் சந்திப்பு… கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு?
ராமதாஸுடன் சசிகலா மீண்டும் சந்திப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 20 Mar 2026 18:16 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 20) திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில், கூட்டணி தொடர்பாக இருவரும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி, ஸ்ரீகாந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பாமகவின் சேலம் தொகுதி எம்எல்ஏ அருள் சந்திப்பை புறக்கணித்துள்ளார். இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசை, சசிகலா திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதில், இருவரும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அப்போது, கூட்டணி குறித்து தனது கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக ராமதாஸ் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2- ஆவது முறையாக ராமதாசை, சசிகலா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us