AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டணத்தை உயர்த்திய ஜொமேட்டோ – ஸ்விகியுடன் உள்ள வித்தியாசம்?

Zomato Platform Fee Up: உணவு டெலிவரி செயலிகளில் முக்கிய இடம் பிடித்துள்ள ஜொமேட்டோ நிறுவனம், தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் அடிக்கடிஉணவு ஆர்டர் செய்பவர்கள் மீது செலவு அதிகரிக்கும். இந்த நிலையில் ஸ்விகியுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு விலை அதிகம் என பாரக்கலாம்.

கட்டணத்தை உயர்த்திய ஜொமேட்டோ – ஸ்விகியுடன் உள்ள வித்தியாசம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Mar 2026 18:44 PM IST

இந்தியாவில் உணவு டெலிவரி சேவைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள ஜொமேட்டோ நிறுவனம், தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.14.90 ஆக உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு ரூ.12.50 ஆக இருந்த இந்த கட்டணம், தற்போது கூடுதலாக ரூ.2.40 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜொமேட்டோ செயலியின் பயன்பாட்டில் உணவு ஆர்டர் செய்யும் போது, வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டிய பிளாட்ஃபார்ம் கட்டணம் தற்போது ஜிஎஸ்டி சேர்க்கப்படாமல் ரூ.14.90 ஆக உயர்ந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் உணவு ஆர்டர் செய்வது சிறிதளவு அதிக செலவாகும். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பாரக்கும் நபர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிகமாக உணவு ஆர்டர் செய்பவர்கள் மீது செலவு அதிகரிக்கும்

திடீர் கட்டண உயர்வுக்கான காரணம் என்ன?

ஜொமெட்டோ நிறுவனத்தின் இந்த திடீர் கட்டண உயர்வுக்கான முக்கிய காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் டெலிவரி செலவுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்கள் கூறப்படுகிறது. ஜொமேட்டோ நிறுவனம் மட்டுமே தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்விகி நிறுவனத்துடன் ஒப்பிடும் போது ஜொமேட்டோவில் எவ்வளவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : Gold Price : தொடர் சரிவுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

ஜொமேட்டோ நிறுவனத்தின் கட்டணம் உயர்வு

 

ஸ்விகி நிறுவனத்தில் ஜிஎஸ்டி கட்டணத்துடன் சேர்த்து ர.14.99 பிளாட்ஃபார்ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜொமேட்டோவில் ஜிஎஸ்டி கட்டணம் இல்லாமல் பிளாட்ஃபார்ம் கட்டணமாக ரூ.14.90 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் மேஜிக்பின் என்ற நிறுவனத்தில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அந்த நிறுவனத்தில் ரூ.14.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேஜிக்பின் நிறுவனத்தில் கட்டணம் உயர்த்தாமல் இருப்பதற்காக வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அப்பா சொத்தில் குழந்தைகளுக்கு உரிமை இல்லையா? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

ஜொமேட்டோ நிறுவனத்தின் வளர்ச்சி

எட்டர்னல் என்ற நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜொமேட்டோ நிறுவனம் 2025 மற்றும் 2026 ஆம் நிதியாண்டின மூன்றாம் காலாண்டில் 73 சதவிகிதம் லாபம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலாண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் லாபம் ரூ.102 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் நிறுவன வளர்ச்சி தொடர்ந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு கட்டண சுமை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us