AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தொடர் சரிவுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

Gold and Silver Price Today | ஈரான் போர் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று சற்று விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தொடர் சரிவுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Mar 2026 11:23 AM IST

சென்னை, மார்ச் 20 : கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதாவது இன்று தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி (Silver) கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் காரணமாக தொடர் சரிவை சந்திக்கும் தங்கம்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இந்த நிலையில், எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு.. பெரும் பலன் அடைய போகும் தமிழகம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us