ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. இத்தனை லட்சம் பெண்களுக்கா?.. இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

magalir urimai thogai scheme: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாக சேர்க்கப்பட்ட பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்குகிறார். இதன் மூலம், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்கிறது.

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. இத்தனை லட்சம் பெண்களுக்கா?.. இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

கோப்புப் படம்

Updated On: 

12 Dec 2025 06:32 AM

 IST

சென்னை, டிசம்பர் 12: விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த அக்கட்சி, சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்துதான் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. அதிலும், தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் எனக்கூறி லட்சக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, விடுப்பட்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பயனர்களை கண்டறிந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சியினர் உறுதி அளித்து வந்தனர். எனினும், அப்படியும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழுந்தது.

மேலும் படிக்க: ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!

இதுவரை ரூ.30,838.45 கோடி செலவு:

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டபோதே, மொத்தம் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால், தகுதியின் அடிப்படையில் 1,0 6, 5000 பெண்கள் தகுதியுடைவர்களாக முதற்கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, மேலும் சிலர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன்படி, தற்போது 1,13,75,492 பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக இதுவரை மொத்தம் ரூ.30,838.45 கோடி செலவிடப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் நடவடிக்கை:

இந்நிலையில், விரைவில் 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த சமயத்தில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்று எண்ணிய அக்கட்சி, விடுப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிரை இத்திட்டத்தில் இணைக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களை அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்காக, நவ.15ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, வருவாய்த்துறையினர் தீவிரமாக கள ஆய்வு செய்தனர்.

17 லட்சம் பெண்களுக்கு புதிதாக உரிமைத்தொகை:

அவ்வாறு அமைக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். அதில் 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமைத் தொகையை வழங்குகிறார். இதன் மூலம், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்கிறது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு?

தற்போது புதிய பயனாளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தொடர்ந்து, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க மறுபடியும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அறிவிப்பு இன்று வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..
ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்க நகை.. பையை வங்கியில் விட்டுச்சென்ற பெண்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..
செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் உரிமம் வழங்கும் முகாம்.. 8 இடங்களில் நடக்கும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
தவெகவின் சின்னம் இதுதான்?.. ஈரோடு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார் விஜய்?
ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..
சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை
நோயால் பாதிக்கப்பட்ட எறும்புகளின் ஆச்சரியமூட்டும் செயல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..
ஒரு மணி நேர கணவர் சேவை.... ஆண்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
19,000 டாலர் மதிப்புள்ள முட்டைகளை முழுங்கிய நபர்.. நியுசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..
நானும் வீட்டுக்கு போகனும்... மன்னிப்புக்கேட்ட இண்டிகோ பைலட்