துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ரவுடி.. சுட்டுப் பிடித்த போலீஸ்.. கோவையில் பரபரப்பு!
Coimbatore Crime News : கோவையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ரவடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். நாட்டு துப்பாக்கியை கைப்பற்ற ரவடியை அழைத்து சென்றபோது, அவர் தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து போலீசார், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர். ரவுடி தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோயம்புத்தூர், மே 15 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளன்ர். மிரட்டல் புகாரில் கைதான ரவடி ஹரிஸ்ரீயின் துப்பாக்கியை பறிமுதல் செய்ய போலீசார் அழைத்து சென்றபோது, அவர் தப்ப ஓட முயன்றார். அப்போது, அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், கோவையில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, போலீசார் ரவடியை சுட்டுப் பிடித்துள்ளனர்.
ரவுடியை சுட்டுப் பிடித்த கோவை போலீஸ்
கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்ரீ. திருச்சியைச் சேர்ந்த சக்திவேல். இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. நீண்ட நாட்களாக இவர்களுக்கு இடையே பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ, சட்டவிரோதமாக மறைந்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வானில் சுட்டப்படி சக்திவேலை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், சக்திவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து, போலுசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஸ்ரீயை தேடி அலைந்தனர். அவரை கோவையில் போலீசார் கைது செய்தனர். அவரிடன் இருந்து துப்பாக்கியை பறிமுதல் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, அவர் தப்பிக்க முயன்றார்.
இதனால், சுதாரித்துக் கொண்ட போலீசார், ஹரிஸ்ரீ மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து, படுகாயம் அடைந்த ஹரிஸ்ரீயை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான ஹரிஸ்ரீ மீது ஏற்கனேவே, பல வழக்குகள் உள்ளன. கோவையில் ரவடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பரபரப்பு
முன்னதாக, கோவையில் 21 வயது கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சூர்யா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் காதலி இவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு, சூர்யாவிடம் பேசிக் கொண்டு வந்திருந்தார். இதனை அடுத்து, சூர்யாவை கொலை செய்ய கார்த்திக் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, சம்பவத்தன்று சூர்யாவுக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். அவர் சுயநினைவை இழந்தபிறகு, அவரது கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார். பின்னர், அவரது உடலை ஒரு காரில் எடுத்து சென்று, பயன்படுத்தப்படாத பேருந்து நிலையத்தில் வீசினார். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, காத்திக் உட்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.