அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.. சிபிஐ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
Sivaganga Ajith Kumar Custodial Death : அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறை வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகன பதிவெண் பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், 2 போலி நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது. அஜித் குமாரை அழைத்து சென்ற டெம்போ வாகனத்தில் இருந்து மதுபாட்டில்கள், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அஜித் குமார்
சிவகங்கை, ஜூலை 19 : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கை (Sivaganga Custodial Death) சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவ நடந்த இடங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, உயிரிழந்த அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, அஜித் குமார் அழைத்து சென்ற வாகனம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், காவல்துறை வாகனத்தின் பதிவெண் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . அப்போது, இரண்டு வாகன பதிவெண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. TN 01G 0491 என்ற வாகன பதிவெண்ணை TN63 G 0491 என்ற பதிவெண் ஸ்டிக்கரை ஒட்டியது தெரியவந்தது.
போலியான பதிவெண் ஓட்டிய வாகனத்தில் அஜித்குமார் அழைத்து செல்லப்பட்டு இருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அந்த வாகனத்தில் சரக்கு பாட்டில்கள், சீட்டு கட்டுகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித் குமார் கொலை வழக்கில் கோவில் பின்புறத்தில் இருந்து அடித்து அஜித்குமார் அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் அய்யானரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
Also Read : பெரியார் நூலக கட்டிடத்தில் கண் திருஷ்டி படம் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
அஜித்குமார் மரண வழக்கு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் 27 வயதான அஜித் குமார். 2025 ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு புகார் ஒன்றில் அவரை திருப்புவனம் போலீசார் அழைத்து சென்றனர். மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவர் சம்பவத்தன்று கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது காரை பார்க் செய் வேண்டும் என அஜித் குமாரிடம் கூறியிருக்கிறார்.
தனக்கு கார் ஓட்ட தெரியாத என்று கூறிய அஜித் குமார், வேறு ஒருவரை அழைத்து காரை பார்க் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், கோயிலுக்கு சென்றுவிட்டு காருக்கு வந்த நிகிதா தனது நகை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நிகிதா புகார் அளிக்கப்பட்டதே அடுத்து, அஜித் குமாரை திருப்புவனம் போலீசார் அழைத்து சென்றனர். இதனை அடுத்து, அவர் அடுத்த நாள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
Also Read : கோவளம் பகுதியில் குவிந்த பூநாரைகள்: சென்னை பறவை ஆர்வலர்களுக்கு ஓர் அரிய விருந்து!
இதற்கிடையில், அஜித் குமார் உயிரிழந்துவிட்டதாக கூறினர். அதோடு, அஜித் குமார் போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, காவல்துறை விசாரணையில் அஜித் குமார் உயிரிழந்தது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைதாகினர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். தற்போது இந்த விசாரணை தீவிரமாக நடந்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.