பட்டப்பகலில் அதிர்ச்சி.. மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்.. வேலூரில் சம்பவம்
Vellore Child Kidnap : வேலூர் மாவட்டத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தந்தை முகத்தில் மிளகாய் பொடி தூவி, 4 வயது சிறுவனை கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, திருப்பத்தூர் பகுதியில் போலீசார் சிறுவனை மீட்டுள்ளனர்.

சிறுவன் கடத்தல்
வேலூர், செப்டம்பர் 24 : வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பட்டப்பகலில் 4 வயது சிறுவன் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே தந்தை மீது மிளகாய் பொடி தூவி காரில் சிறுவனை கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. சிறுவன் காணாமல் போன, ஒரு மணி நேரத்தில் போலீசார் மாதனூரில் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேணு. இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் யோகேஷ். 4 வயதான சிறுவன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம்போல் தந்தை வேணு மதிய உணவிற்காக சிறுவனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் பைக்கில் அழைத்து வந்த அவர், வீட்டின் கேட் வாசலில் தனது பையனுடன் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் வேணு மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர்.
அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், சிறுவனை காரில் கடத்தி சென்றுள்ளது. இதனால், அதிர்ச்சியான வேணு உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை தீவிரப்படுத்தினர். குழந்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், சிறுவனை கடத்திய கார் கர்நாடக மாநில பதிவு எண் கொண்டது தெரியவந்துள்ளது. கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் சிறுவனை கடத்தியது தெரிந்தது. இதனை அடுத்து 6 தனிப்படைகள் அமைத்து சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
Also Read : வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!
மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்
இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சிறுவன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்ததும், கடத்தப்பட்ட சிறுவன் என தெரியவந்துள்ளது. மாதனூர் பகுதியில் சிறுவனை விட்டுச் அந்த கும்பல் விட்டுச் சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
Also Read : சென்னை மெட்ரோ ரயிலில் பரபரப்பு… மலேசிய நாட்டு பெண்ணின் பேக்கை திருடிய HR – அதிர்ச்சி சம்பவம்
இதனை அடுத்து, போலீசார் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுவன் காணாமல் போன ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். சிறுவன் நலமுடன் உள்ள நிலையில் கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். எதற்காக சிறுவன் கடத்தப்பட்டார்? முன்பகை காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் சிறுவன் வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.