தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளரை அறிவிக்க மாட்டார் – திலகபாமா..

இந்த சூழலில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் மது ஊழல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். போதைப்பொருள் காரணமாக சமூகமே சீரழிந்து வருவதாகவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளரை அறிவிக்க மாட்டார் - திலகபாமா..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Mar 2026 18:27 PM

 IST

திண்டுக்கல், மார்ச் 17, 2026: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவில் எந்த குழப்பமும் இருக்காது என மாநில பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. தந்தை மற்றும் மகன் இடையே உள்ள அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாமக தற்போது இரு தலைமைகளின் கீழ் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக ஒன்றுபடுமா? தொண்டர்களின் நிலை என்ன ஆகும்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகிறது.

இந்த சூழலில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் மது ஊழல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. 2,160 பறக்கும் படைகள் அமைப்பு.. ரூ.23.28 கோடி பறிமுதல்..

போதை மாநிலமாக தமிழகம்:

மக்கள் விரோத அரசை அகற்றுவதற்கு வாக்காளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், அதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் காரணமாக சமூகமே சீரழிந்து வருவதாகவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

போட்டி வேட்பாளரை ராமதாஸ் அறிவிக்கமாட்டார்:

பாமகவில் எந்த தொய்வும் இருக்காது என்றும், உச்சநீதிமன்றத்தில் மாம்பழச் சின்னத்தை முடக்கி வைக்க வழக்கு தொடரப்பட்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். பாமக போட்டியிடும் தொகுதிகளில் வேறு வேட்பாளர்களை ராமதாஸ் நிறுத்துவார் என நினைக்க வேண்டியதில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் படிக்க: ஜி பே ட்ரான்ஸ்ஃபரில் வாக்கு வேட்டை: வங்கிகளுக்கு கடும் அலர்ட்..!

மேலும், அதிகாரிகள் மக்களுக்காக செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் போல அவர்களும் சாலையில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கோம்பை – ஒட்டச்சத்திரம் வனப்பகுதியில் வனஅத்துமீறல், சட்டவிரோத தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான கேள்விகளையும் எழுப்புவோம் என அவர் தெரிவித்தார்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..