முடிந்த ராமதாஸ் – அன்புமணி மோதல்? தைலாபுரத்தில் நடந்த கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோ!

PMK Anbumani Ramadoss Issue : விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தாயின் பிறந்தநாளை கேக் வெட்டி பாமக தலைவர் அன்புமணி கொண்டாடினர். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இருந்துள்ளார். ஆனாலும், ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் பேசிக்கவில்லை என கூறப்படுகிறது. தந்தை மகன் மோதலுக்கு நடுவில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

முடிந்த ராமதாஸ் - அன்புமணி மோதல்? தைலாபுரத்தில் நடந்த கொண்டாட்டம்..  வைரலாகும் போட்டோ!

அன்புமணி ராமதாஸ்

Updated On: 

16 Aug 2025 11:13 AM

 விழுப்புரம், ஆகஸ்ட் 16 :  விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் தனது தாயார் சரஸ்வதியின் பிறந்தநாளை தந்தை ராமதாஸ் (Ramadoss) உடன் இணைந்து அன்புமணி (Anbumani) கொண்டாடியுள்ளார். பாமகவில் தந்தை மகன் இருவருக்கும் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால், அன்புமணியிடம் ராமதாஸ் பேச மறுத்துள்ளதாக கூறப்படுகிறதுகடந்த சில தினங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு, தானே கட்சிக்கு தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். அதோடு, இருவரும் அவர்களது தலைமையில் கட்சி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முடிந்த ராமதாஸ் – அன்புமணி மோதல்?

இதனால் பாமகவில் சலசலப்புகள் இருந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால், பாமகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.   அண்மையில் கூட, ராமதாஸ் மகளிர் மாநாட்டை நடத்தினார். மேலும், அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இப்படியாக இருவரும் தனித்தனியாக கட்சி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில், பாமக தலைரவாக அன்புமணி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக் குழு சட்டவிரோதம் எனக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இப்படியே, இருவருக்கும் இடையேயான மோதல்  நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இப்படியான சூழலில், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நேற்று அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read : சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. விரக்தியுடன் பதிலளித்த நிறுவனர் ராமதாஸ்..

தைலாபுரத்தில் நடந்த கொண்டாட்டம்

2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நேற்று தன தாய் சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, குடும்பத்துடன் அன்புமணி தைலாபுரத்தில் உள்ள வீட்டில் சென்றிருக்கிறார். அன்புமணியுடன் அவரது மனைவி சௌமியா மற்றும் மூன்று மகள்களும் தைலாபுரத்தில் தாய் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சரஸ்வதியின் பிறந்தாளை அனைவரும் கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Also Read : ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன் – அன்புமணி தலைமையில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டம்..

சரவஸ்திக்கு அருகிலேயே ராமதாஸ் மற்றும் அன்புமணி நின்றிருந்தனர். தொடர்ந்து, அன்புமணிக்கும், அவரது மனைவிக்கு சரஸ்வதி கேக் ஊட்டி இருக்கிறார். இந்த நிகழ்வில் சரஸ்வதியின் பிறந்தாள் கொண்டாட்டத்தில் ராமதாஸும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பில் ராமதாஸ் அன்புமணியிடம் பேச மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சி எதிர்பார்த்தப்படி கை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.