இன்று திமுகவில் இணைகிறார் வைத்திலிங்கம்?.. ஓபிஎஸ்-க்கு காத்திருக்கும் ஷாக்!!

Vaithilingam joining in DMK: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அண்மையில் நடந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் கூட, உணர்ச்சிவசமாக பேசியிருந்தார். குறிப்பாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் இல்லையென்றால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இன்று திமுகவில் இணைகிறார் வைத்திலிங்கம்?.. ஓபிஎஸ்-க்கு காத்திருக்கும் ஷாக்!!

திமுகவில் இணைகிறார் வைத்திலிங்கம்?

Updated On: 

21 Jan 2026 07:01 AM

 IST

சென்னை, ஜனவரி 21: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் எம்எல்ஏ இன்று (ஜனவரி 21) திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் அவர், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 4 முறை அவர் வென்றுள்ளார். அதோடு, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக அழைப்பு விடாத நிலையில், அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “நம்மை பிடிக்காத சிலரும் கூட்டணியில் இருப்பார்கள்”.. மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபர பேச்சு!!

வைத்திலிங்கம் அரசியல் பயணம்:

இவர், 2001, 2006, 2011, 2021 என 4 முறை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார். அதோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 2001 மற்றும் 2006ல் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், 2011 மற்றும் 2016ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அண்மையில் நடந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் கூட, உணர்ச்சிவசமாக பேசியிருந்தார். குறிப்பாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் இல்லையென்றால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறி மாபெரும் வெற்றி பெரும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

குழப்பத்தில் ஓபிஎஸ் அணி:

இந்நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பான பாஜகவின் முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. அதோடு, பாஜகவும் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை. இதனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெறுவதா? திமுக அணியில் இடம் பெறுவதா? தனிக் கட்சி தொடங்குவதா? என்பதில் ஓபிஎஸ் அணி குழப்பத்தில் இருந்து வருகிறது.

வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைகிறார்:

இந்நிலையில், வைத்திலிங்கத்துடன், ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு தீவிர ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜனும் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் இன்று (ஜனவரி 21) காலை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்:

ஏற்கெனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர், அவர் தமது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்எல்ஏ பழனி சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். மற்றொரு முன்னாள் எம்எல்ஏ-வான ஜேசிடி பிரபாகரன் அண்மையில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இப்படி அடுத்தடுத்து ஓபிஎஸ் கூடாரம் காலியாகி வருகிறது.

ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..