’விஜயின் இதயத்தில் வலியே இல்ல.. சினிமா வசனம் பேசுறாரு’ சீமான் பளீச்!
TVK Stampede : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அதாவது, விஜய் பேசியது திரைப்படம் வசனம் போன்று இருப்பதாகவும், விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீமான் - விஜய்
சென்னை, அக்டோபர் 02 : கரூர் துயரம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை என்றும் விஜய் பேசியது திரைப்படம் வசனம் போல இருந்தது என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் திமுகவையும், தவெகயும் ஒவ்வொரு தரப்பினர் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், நான்கு மாவட்டங்களில் நடந்த பிரச்சாரத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காத நிலையில், கரூரில் மட்டும் எப்படி நடந்தது என கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வர் ஸ்டாலின் தன்னை கைது செய்ய வேண்டும் என கூறினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் வீடியோ குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Also Read : அமித் ஷாவுடன் செல்போனில் பேசிய விஜய்? உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்!
’விஜயின் இதயத்தில் வலி இல்லை’
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜனர் நினைவு நாளையொட்டி, விருதுநகரின் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் விஜய் குறித்து சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ” விஜய் சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ திரைப்படம் வசனம் போல் இருந்தது.
அவரது இதயத்தில் காயமோ, வலியோ இல்லை. இருந்தால் அந்த மொழியில் வீடியோவில் வெளிப்பட்டு இருக்கும். விஜய் பேசியது கேட்கும்போது கஸ்டமா இருக்கு. திரைப்படம் வசனம் போல பேசுகிறார். இது நல்ல அணுகுமுறை இல்லை. CM சார் என விஜய் கூறுவதே சின்னப் பிள்ளைகள் விளையாட்டிற்கு அழைப்பது போல் இருக்கிறது.
Also Read : விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!
முதல்வர் மீது விஜய்க்கு மதிப்பில்லை என்றாலும் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு மதிப்பு தர வேண்டும். பெருந்தலைவர்கள் அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். எனவே, விஜய் பார்த்து பேசனும். CM சார் அப்படியெல்லாம் விஜய் பேசக் கூடாது. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்.