Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அனுமதி!

MDMK Chief Hospitalized : சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ , வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அனுமதி!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 May 2025 08:03 AM

சென்னை, மே 06 : சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோ (MDMK Chief Vaiko) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்து வைகோ தரப்பிலும், அப்பல்லோ மருத்துவமனை தரப்பிலும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு என்னாச்சு?

80 வயதான வைகோ, அரசியலில் ஆட்கிட்வாக இருந்து வருகிறார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி பலப்படுத்த தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கூட, வக்பு சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலும் வைகோ கலந்து கொண்டனர். இப்படி  அரசியலில் ஆக்டிவாக இருக்கும் வைகோவுக்கு சில உடல் நல பிரச்னைகள் உள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு கூட வைகோவுக்கு வைகோவிற்கு வலது கை தோள்பட்டையில் அறுசை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் வைகோ, நெல்லையில் உள்ள சகோதரர் வீட்டில் கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் வைகோவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து, வைகோவுக்கு தோள் பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்பட்டடது. அதன்பிறகு உடல் பூரண நலம் பெற்று வீடு திரும்பினார்.  இதனை அடுத்து, அடிக்கடி வழக்கமான பரிசோதனைக்காக செல்வது உண்டு.

சென்னை மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதியான இன்று மதிமுக பொதுச் செயலளார் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  2025 மே 5ஆம் தேதியான நேற்று இரவு வைகோ, வீட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவருக்கு சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வைகோ தரப்பிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் எந்த தகவலும் வரவில்லை.  அண்மையில் கூட, மே தின விழாவில் மதிமுக அலுவலகத்தில் நடந்த விழாவில்  கலந்து கொண்டு கொடியேற்றினார். இந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  விரைவில் இதுகுறித்து மருத்துவமனை தரப்பில்  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யாரைப் பார்த்தும் பயப்படாதே.. பும்ராவுக்கு சச்சின் அட்வைஸ்
யாரைப் பார்த்தும் பயப்படாதே.. பும்ராவுக்கு சச்சின் அட்வைஸ்...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் அடுத்தப் படம் இதுதான்...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் அடுத்தப் படம் இதுதான்......
நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை.. என்னெல்லாம் நடக்கும்?
நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை.. என்னெல்லாம் நடக்கும்?...
இபிஎஃப்ஓவில் வழங்கப்படும் 5 விதமான ஓய்வூதியங்கள் - முழு விவரம்!
இபிஎஃப்ஓவில் வழங்கப்படும் 5 விதமான ஓய்வூதியங்கள் - முழு விவரம்!...
கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?
கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?...
திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?
திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?...
மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்!
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்!...
வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..?
வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..?...
‘தேர்வில் தோல்வியடைவாய்’ என்றார்கள்… ஆனால் வெற்றியை வென்றேன்!
‘தேர்வில் தோல்வியடைவாய்’ என்றார்கள்… ஆனால் வெற்றியை வென்றேன்!...
சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் வருகை.. 2 நாட்கள் முன்பதிவு ரத்து!
சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் வருகை.. 2 நாட்கள் முன்பதிவு ரத்து!...