கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ.. தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு துறை!
Massive Forest Fire In Kodaikkanal | தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கொடைக்கானல் உள்ளது. இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
திண்டுக்கல், மார்ச் 22 : திண்டுக்கல் (Dindugul) மாவட்டம், கொடைக்கானல் (Kodaikkanal) மேல்மலை பகுதியான பூம்பாறை அருகே நேற்று (மார்ச் 21, 2026) பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், வனத்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொடைக்கானலில் பயங்கர தீ விபத்து
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அங்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமானதாக உள்ளது. அந்த வகையில், கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை அருகே நேற்று காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க : “நாங்க என்ன தர்மத்துக்காகவா கட்சி நடத்துறோம்?”.. பாஜக மீது அதிருப்தி தெரிவித்த அதிமுக
தீயணை அணைக்க போராடி வரும் தீயணைப்பு துறையினர்
பூம்பாறை அருகே உள்ள மலைப்பகுதியில் உள்ள தனியார், அரசு வருவாய் நிலங்களில் தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் உடன் இணைந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அங்கு காட்டுத்தீ கட்டுக்குள் வராத நிலையில், தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க : தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாக இந்த கொடைக்கானல் மலை உள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக அங்கு ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைவிடாது பற்றி எரியும் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருமாறு அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறியுள்ள நிலையில், இனி இத்தகைய விபத்துக்கள் எதுவும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.