சென்னை, ஜனவரி 23 : இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் (Train) உள்ளது. பேருந்து, விமானம் போன்ற போக்குவரத்துகளைக் காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூரதம் பயணிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்ப மெட்ரோ, வந்தே பாரத் என ரயில் போக்குவரத்து மேம்பாடு அடைந்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக ரயில் ஒன் போன்ற செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரமாரிப்பு பணிகள் காரணமாக அந்த ரயில் நிலையத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்ன எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை – மும்பை மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சில விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : சென்னை தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் அனுமதி…அடையாள அட்டை கட்டணத்தில் அதிரடி மாற்றம்!
எழும்பூர் ரயில் நிலையத்தில் இயக்கப்படும் ரயில்களில் மாற்றம்
இதன்படி, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, குறிப்பிட்ட சில விரைவு ரயில்கள் சென்னை எழும்பூர் நிலையத்திற்கு பதிலாக சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மேலும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களும் சென்னை பீச் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை – மும்பை அதிவேக விரைவு ரயில் (ரயில் எண் 22158), பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 4, 2026 வரை தினமும் காலை 6.45 மணிக்கு சென்னை பீச் நிலையத்திலிருந்து புறப்படும்.
இதையும் படிக்க : தைப்பூசம்: மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு..என்ன அது!
அதேபோல், சென்னை பீச்–ஹைதராபாத் சார்மினார் அதிவேக விரைவு ரயில் (ரயில் எண் 12759), பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 5, 2026 வரை தினமும் மாலை 6.20 மணிக்கு சென்னை பீச் நிலையத்திலிருந்து புறப்படும். மேலும், ஹைதராபாத் – சென்னை சார்மினார் அதிவேக விரைவு ரயில் (ரயில் எண் 12760), பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 4, 2026 வரை தினமும் காலை 7.00 மணிக்கு சென்னை பீச் நிலையத்தில் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக மாற்றங்கள், எழும்பூர் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும், பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடும்போது இந்த மாற்றங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
