ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு – வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Court Halts Recovery : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு எதிராக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு - வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

Published: 

21 Jan 2026 20:27 PM

 IST

சென்னை, ஜனவரி 21 : மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா (Jayalalitha) தொடர்பான வருமானவரி வழக்கில், வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வருமான வரித்துறை மேற்கொண்டு வந்த மீட்பு நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்ட தீபாவிற்கு ரூ.13 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டும் என வருமானவரி துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், மற்றொரு வாரிசான தீபக்  என்பவரையும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துறை வழக்கு

முன்னதாக நடைபெற்ற விசாரணையின் போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முதலில் ரூ.36 கோடி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் அனுப்பிய வருமானவரி துறை, பின்னர் ரூ.13 கோடி செலுத்த வேண்டும் என வேறொரு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தனர். சரியான தொகையை தெளிவாக குறிப்பிட்டால், அதை செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து, வரி பாக்கி தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு வருமானவரி துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க : அமமுகவை தொடர்ந்து தேமுதிகவும் தேஜ கூட்டணியில் இணைகிறதா?பிரேமலதா விஜயகாந்த் கூறுவதென்ன!

இந்த வழக்கு ஜனவரி 21, 2026 அன்று திபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி வருமானவரி துறை இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வருமானவரி துறை இரண்டு வாரங்களுக்குள் வரி பாக்கி தொடர்பான பதில்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை வரி பாக்கி வசூல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால், ஜெயலலிதா வருமானவரி வழக்கில் நடைபெற்று வந்த வசூல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வருமானவரி துறை தாக்கல் செய்யும் விளக்கத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க உள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க : “என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்”.. இபிஎஸ் உற்சாக வரவேற்பு!!

இந்த நிலையில் அவரது பெயரிலான வருமான வரி செலுத்துவது தொடர்பான அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபாவிற்கு அனுப்பப்பட்டது. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு வருமான வரி துறை வழக்கில் ஜெயலலிதாவின் பெயர் இடம் பெறுவது அவரது கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?