Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி.. பிற கடைகள் உடனடியாக அகற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

Chennai Marina Beach: கோவளம் கடற்கரையில் எந்த கடைகளும் இல்லாத நிலையில், அதைப் போல மெரினாவையும் மாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மெரினாவில் உள்ள கடைகள் காரணமாக அதை கடற்கரை என அழைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; அது தற்போது கடைகள் நிறைந்த ஒரு பஜார் போல் காட்சியளிக்கிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி.. பிற கடைகள் உடனடியாக அகற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jan 2026 07:12 AM IST

சென்னை, ஜனவரி 9, 2026: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு, வெறும் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரையாக திகழ்கிறது. இங்கு தினசரி ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். அதேபோல், சென்னை மெரினா கடற்கரையை எடுத்துக்கொண்டால், வழிநெடுகிலும் பல்வேறு வகையான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழக்கு பின்னணி என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் கடை ஒதுக்கப்படாததை எதிர்த்து தேவி என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22ஆம் தேதி காலை 9 மணியளவில் மெரினா கடற்கரையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஜனவரி 2, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் எந்த பகுதியில் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், நீலக்கொடி பகுதியாக அறிவிக்கப்பட்ட மூன்று பகுதிகளுடன், நினைவிடங்களுக்கு பின்புறம் உள்ள 35 ஏக்கர் நிலத்தையும் இணைத்து அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. புதிதாக கடைகளுக்கு அனுமதி வழங்கும்போது அதிகப்படியான கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டது.

மேலும் படிக்க: இன்று வேப்பூரில் தேமுதிக உரிமை மீட்பு மாநாடு 2.0.. கூட்டணியை அறிவிக்கிறார் பிரேமதா..

சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம்:

இந்த சூழலில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் கடை ஒதுக்கீடு தொடர்பான வரைபடம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், கடந்த உத்தரவின் அடிப்படையில் கடைகளின் எண்ணிக்கை 1417-இலிருந்து 166-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்ததை பதிவு செய்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீலக்கொடி பகுதி 2026 செப்டம்பரில் நடைமுறைக்கு வரும் என்ற மாநகராட்சி விளக்கத்தை ஏற்க முடியாது என தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, நினைவிடங்கள் அருகே உள்ள பகுதிகளை உடனடியாக நீலக்கொடி பகுதிக்குள் கொண்டு வர வேண்டும்; கடைகள் எப்போது முழுமையாக அகற்றப்படும் என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்; நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்கள் உள்ளன என்பதையும் விளக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க: சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. அலுவலக நேரத்தில் மட்டும் கடைபிடிக்கப்படும்..

கடற்கரையாக இல்லாமல் பஜாராக திகழும் மெரினா கடற்கரை:

மேலும், கோவளம் கடற்கரையில் எந்த கடைகளும் இல்லாத நிலையில், அதைப் போல மெரினாவையும் மாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மெரினாவில் உள்ள கடைகள் காரணமாக அதை கடற்கரை என அழைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; அது தற்போது கடைகள் நிறைந்த ஒரு பஜார் போல் காட்சியளிக்கிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மாநிலக் கல்லூரி எதிரே உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பை கடைகள் இல்லாத பகுதியாக மாற்ற மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி:

மெரினாவில் 1,600-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அனுமதி வழங்க முடியாது; வெறும் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அந்த 300 கடைகளில், தலா 100 கடைகள் வீதம் பொம்மைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பேன்சி கடைகள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும், உழைப்பாளர் சிலை அருகே 100 கடைகள், கலங்கரை விளக்கம் அருகே 100 கடைகள் மற்றும் பிற குறிப்பிட்ட இடங்களில் 100 கடைகள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.