கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு
LPG Shortage Stops Tea Sales : இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள டீக்கடைகளில் டீ விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வடை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 11 : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக இந்தியா முழுவதும் வணிக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஹோட்டல்கள், ரெஸ்டாராண்ட்களுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்ப்டடு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான உணவகங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான உணவங்களில் மெனுக்களை குறைத்து வருகின்றன. பெரும்பாலான உணவகங்களில் விறகுகளை வைத்து உணவு தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெருநகரங்களில் வேலை, படிப்பு சார்ந்து தங்கியிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், இது வரும் நாட்களில் வணிக சிலிண்டர்களின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்
இந்த நிலையில் சென்னையில் உள்ள டீக்கடைகளில் டீ விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள டீக்கடைகளில் இண்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு டீ விற்பனை நிறுத்தப்பட்டு காபி மற்றும் பால் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வடைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கத்தில் ஒரு சில கடைகளில் டீ விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு காபி மற்றும் பால் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்த 43 மாணவர்கள்.. மருத்துவமனையில் அனுமதி!
பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழங்ககமாக ரூ.12க்கு விற்கப்படும் பால் தற்போது ரூ.15க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் சிலிண்டர் விநியோகம் சீராகும் வரையில் கடைகள் மூடப்படும் அபாயம் உருவாகும் என கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் டீ, காபி வடை உள்ளிட்டவற்றின் விலை ஏற்றப்பட்டு வருதவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வடை உள்ளிட்ட பொருட்களுக்கு சராசரியாக ரூ.2 விலை ஏற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பார்த்து வரும் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: விறகடுப்புகளுக்கு மாறும் சென்னை ஹோட்டல்கள்
இதற்கிடையில் மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார். இந்தியா எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.