Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 15 விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Trichy Local Holiday: திருச்சி மாவட்டத்திற்கு 2025 ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2025 ஏப்ரல் 15ஆம் தேதி சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறுவதையொட்டி, அன்றைய நாளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 15 விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Apr 2025 14:39 PM IST

திருச்சி, ஏப்ரல் 09: திருச்சி மாவட்டத்திற்கு 2025 ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Trichy Local Holiday) அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 2025 ஏப்ரல் 15ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 2025 ஏப்ரல் 15ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அந்தந்த மாவட்டத்திற்கு வழக்கமாக விடப்படும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 15 விடுமுறை

குறிப்பிட்ட மாவட்டத்தில் ஏதேனும் கோயில் திருவிழா போன்றவை நடந்தால் அந்த நாட்கள் மட்டும் விடுமுறையாக அறிவிக்கப்படும்.  அதே  நாட்களில் மற்ற மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும்.

எனவே, குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்து வருகிறார். அந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், வேறொரு சனக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோயிலில் 2025 ஏப்ரல் 15ஆம் தேதி சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

இந்த திருவிழாவுக்கு உள்ளூர் மக்கள் பலரும் கலந்து கொள்வார்கள். இது வெகு விமர்சையாக நடைபெறும். இதனால், திருச்சி மாவட்டத்திற்கு 2025 ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

வெளியான முக்கிய அறிவிப்பு

இந்த நாளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கு விடுமுறையாக இருக்கும். விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், 2025 மே 3ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளகாவும் அறிவித்து  மாவட்ட பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

2025 ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மூலம் திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அதாவது, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2025 ஏப்ரல் 14ஆம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனி, ஞாயிறு விடுமுறையை சேர்த்தால் திருச்சி மாவட்டத்திற்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைக்கிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் சுலபமாக திட்டமிட்டுக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

2025 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் TNSTC இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு பயணம் செய்யுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.