AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உண்டா? ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த பிரேமலதா!

DMDK Rajyasabha Seat : தமிழகத்தில் 2025 ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமிக்கும், பிரேமலதாவுக்கும் மாநிலங்களவை சீட் தொடர்பாக பிரச்னை நிலவி வருகிறது. இந்த சூழலில், அது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உண்டா? ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த பிரேமலதா!
பிரேமலதா விஜயகாந்த்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 28 May 2025 07:17 AM IST

சென்னை, மே 28 : மாநிலங்களை எம்.பி சீட் ஒதுக்கீடு குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் பிரேமலதா (DMDK Premalatha Vijayakanth) விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, பொறுமை கடலினும் பெரிது என்றும் தற்போது மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் (Tamil Nadu Rajya Sabha Election) 2025 ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் 6 பேரின் பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, பாமக தலைவர் அன்புமணி, திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துலல்லா, அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.

மாநிலங்களவை தேர்தல்

இந்த 6 காலி இடங்களை நிரப்ப ஜூன் 19ஆம் தேத தேர்தல் நடத்தப்பட உள்ளது- இதற்கு 2025 ஜூன் 9ஆம் தேதி வேட்பு மனு தாக்குதல் தொடங்கும் நிலையில், மனுவை திரும்பப் பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாளாகும். போட்டி இருந்தால், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றையே தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

எம்.பியை தேர்வு செய்ய 34 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில், 134 எம்ஏல்எக்களை வைத்துள்ள திமுகவுக்க 4 இடங்களும், 66 உறுப்பினர்களை வைத்துள்ள அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

திமுகவை பொறுத்தவரை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களை சீட் வழங்கப்படும். இது தொடர்பாக 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில்போதே ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், வழக்கறிஞர் வில்சன், வைகோ, அப்துல்லா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படகிறது.

அதிமுகவை பொறுத்தவரை 2 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், கடந்த முறை போன்று அதிமுக சார்பில் அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அதிமுகவிலேயே 2 பேர் தேர்வு செய்யப்படுவார்களா என்பது தெரியவில்லை. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக ஒரு மாநிலங்களவை சீட் கேட்டுள்ளது.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உண்டா?

இதற்கான ஒப்பந்தமும் 2024ஆம் ஆண்டு போட்டப்பட்டதாக தேமுதிக தரப்பில் சொல்லப்பட்டது.  ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை சீட் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார். இது பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், இவர்கள் இருவருக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தான், மாநிலங்களவை சீட் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

எனவே, 2 அதிமுக மாநிலங்களவை சீட்டில், ஒன்று தேமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தருவாரா அல்லது இரண்டு பேரையும் அதிமுகவிலேயே தேர்வு செய்யவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us