ரிமோட்டை வேற ஆள் தூக்கிட்டு போயிட்டான்… திமுக கூட்டணி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Kamal on DMK Alliance : திமுகவை விமர்சித்து விட்டு மீண்டும் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்தது குறித்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய அவர், விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. அதான் தூக்கிப்போட்டேன். ஆனால் ரிமோட்டை வேற ஆள் தூக்கிட்டு போய்டான் என்றார்.

ரிமோட்டை வேற ஆள் தூக்கிட்டு போயிட்டான்... திமுக கூட்டணி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

கமல்ஹாசன்

Published: 

18 Nov 2025 17:14 PM

 IST

தஞ்சாவூர், நவம்பர் 18 : தஞ்சாவூரில் பிரபல பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகனின் படத்திறப்பு விழா நவம்பர் 18, 2025 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரருமான கமல்ஹாசன் (Kamal Haasan) கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் திமுகவுடன் கூட்டணி குறித்து தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்வில் பேசிய அவர், நீங்கள் தான் திமுகவை (DMK) கடுமையாக விமர்சித்து ரிமோட்டை டிவி மீது போட்டீர்கள். இப்பொழுது ஏன் திமுக கூட்டணி வைத்தீர்கள் என கேட்கிறார்கள் என்று பேசினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திமுக கூட்டணி குறித்த விமர்சனத்துக்கு கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பிரபல பாடலாசிரியருமான சினேகனின் தந்தை சமீபத்தில் மறைந்தார். இந்த நிலையில் அவரது படத்திறப்பு விழா தஞ்சாவூரில் நவம்பர் 18, 2025 அன்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் தான் ரிமோட்டை டிவி மீது போட்டீர்கள். மீண்டும் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேட்கிறார்கள். ரிமோட்டை தூக்கிப்போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. அதான் தூக்கிப்போட்டேன். ஆனால் ரிமோட்டை வேற ஆள் தூக்கிட்டு போய்டான்.

இதையும் படிக்க : ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..

ரிமோட் சர்ச்சை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

‘ரிமோட்டை மறைத்து வைத்துக்கொண்டோம்’

ஆஹா ரிமோட் அங்க போகக் கூடாது. மாநிலத்துடன் இருக்க வேண்டும். கல்வியே மாநிலத்திற்குள் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ரிமோட்டை கொடுப்போமா? அதான் எடுத்துக்கொண்டோம். அதான் மறைத்து வைத்துக்கொண்டோம். இந்த கூட்டணியை புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். புரியவில்லை என்றால் சும்மா இருங்கள். ஜனநாயகம் என வந்துவிட்டால் இதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மாற்று அரசியல் பேசினால் அது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம் எனறார்.

இதையும் படிக்க : தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா? செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது திமுக – அதிமுகவுக்கு மாற்று அரசியலை உருவாக்குவதே இவர் நோக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. அப்போது  திமுகவை விமர்சிக்கும் விதமாக ரிமோட்டை டிவியை நோக்கி கோபமாக வீசினார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும் அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?
முட்டி அளவு நீர்.. தாய்லாந்து உணவகத்தில் குவியும் வாடிக்கையாளர்கள்..
இத்தாலியில் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு சிறப்பு சலுகைகள்..
‘சாட்ஜிபிடி கோ’ ஓராண்டுக்கு இலவசம்.. இந்தியர்களுக்கு பயனர்களுக்கு சலுகை!