அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன்? அரசியல் பரபரப்பை கிளப்பிய பேனர்..

கூட்டணி முடிவு குறித்து டிடிவி தினகரன் தற்போது வரை அறிவிக்கவில்லை. அதேசமயம், அவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருவதாகவும், இதற்காக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பேனரில் டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றது விவாதப்பொருளாகி உள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன்? அரசியல் பரபரப்பை கிளப்பிய பேனர்..

NDA கூட்டணியில் டிடிவி தினகரன்?

Updated On: 

17 Jan 2026 09:30 AM

 IST

செங்கல்பட்டு, ஜனவரி 17: மதுராந்தகத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனரில், டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக, இந்த கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் எனவும் பாஜக தலைவர்கள் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?..

நெருங்கும் தேர்தல், இறுதியாகும் கூட்டணி:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அஎதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூ கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று கூறிவருகிறது.

NDA கூட்டணியில் டிடிவி தினகரன்?

இந்த நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய நிலையில், அவரது புகைப்படம் இடம்பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், கூட்டணி முடிவு குறித்து டிடிவி தினகரன் தற்போது வரை அறிவிக்கவில்லை. அதேசமயம், அவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருவதாகவும், இதற்காக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பேனரில் டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்று இருப்பது விவாதப்பொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: 30 நாட்களில் கூட்டணி குறித்த நல்ல செய்தி வரும்.. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு!

டிடிவி தினகரன் இடம்பெற பாஜக விருப்பம்:

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறும்போது, திமுகவை வீழ்த்த டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். அதை பிரதிபலிக்கும் விதமாக தான் பிரதமரை வரவேற்கும் பேனரில் டிடிவி.தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருக்கலாம் என்று கூறினார்.

"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!
சீனாவில் அடுத்த சாதனை.. neuromorphic ரோபோட்டிக் eskin எப்படி வேலை செய்யும்?
29 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மீன்.. ஜப்பானின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?