“அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்”.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!

Udhayanidhi Stalin; இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்கள் உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம். இந்த 4 மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக தான்.

அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!

உதயநிதி ஸ்டாலின்

Published: 

26 Jan 2026 20:16 PM

 IST

தஞ்சாவூர், ஜனவரி 26: அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டு திமுக ஆட்சி. மற்ற கட்சிகளெல்லாம் ஆண்டுக்கு ஒரு மாநாடு நடத்துகிறார்கள். ஆனால் மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்தும் கட்சி திமுக தான். எத்தனை பேர் வந்தாலும் திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது.

மேலும் படிக்க: மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மணிப்பூரில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. குஜராத்தில் 2002ம் ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்.

5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பமே கொலை செய்யப்பட்டது. அந்த கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமி, உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலின சிறுமி என பல பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த கட்சி பாஜக.

தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்கின்றனர்:

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்கள் உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம். இந்த 4 மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக தான்.

மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

தமிழ்நாட்டை தொட்டு கூட பார்க்க முடியாது:

தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று பாசிஸ்டுகள் கனவு காண்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமின்றி, புதிய அடிமைகளையும் அழைத்து வருகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் திமுகவையும், தமிழ்நாட்டையும் அவர்களால் தொட்டு கூட பார்க்க முடியாது. பாசிசம் என்பது பாஜகவின் அடையாளம். ஆனால் மகளிருக்கான அரசு என்பதே திமுகவின் அடையாளம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?