AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!

இந்த விபரங்களை தான் இப்போது வெளியிடுவதற்குக் காரணம், தன்னைச் சுற்றி நிலவும் தேவையற்ற அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான் என்று அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தனக்கு இருக்கும் பெரும் மதிப்பும் மரியாதையும் என்றும் மாறாது என்றும் கூறியுள்ளார்.

“ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!
ரஜினிகாந்த், அண்ணாமலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Jun 2026 13:01 PM IST

தமிழ்நாட்டில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். அதோடு, அடுத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் பொதுத்தேர்தலில் தனது கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சமூக வலைதளங்களில் நேரலையில் பேசிய அவர், தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக விவரித்துள்ளார். குறிப்பாக அவர் பேசும் போது, 2020ம் ஆண்டு ரஜினிகாந்த் தன்னை கட்சியில் சேர அழைத்ததாகவும், எனினும் அவரின் அழைப்பை ஏற்க மறுத்து பாஜகவில் இணைவதாக கூறியதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: யார் இந்த அண்ணாமலை? காக்கிச் சீருடை முதல் அரசியல் அதிரடி வரை.. முழு அரசியல் பயணப் பார்வை!!

அரசியல் பயணம் சாதாரணமானது அல்ல:

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த தான் அரசியலுக்கு வருவது என்பது அவ்வளவு எளிமையான விஷயமல்ல என்று கூறிய அவர், 2009ல் கேப்டன் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியில் 3 மாத கால் ஒரு இன்டர்ன்ஷிப் ஆக தொடங்கியதாகவ குறிப்பிட்ட அவர், அதன் பின் 10 ஆண்டு காலம் பாரதிய ஜனதா கட்சியில் தொடங்கி, 6 ஆண்டுகாலம் அக்கட்சியில் பயணித்து இன்று தனித்துவமான இயக்கத்தை மக்கள் முன்பு வைக்கிறேன் என்றார்.

ரஜினியிடம் இருந்த வந்த போன் கால்:

அண்ணாமலை தனது புதிய இயக்கத்தின் தொடக்க உரையின் போது, தனது அரசியல் பாதை குறித்து நிலவி வரும் பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, “கடந்த 2020 ஆகஸ்ட் 24 அன்று நான் டெல்லியில் பாஜக-வில் இணைவதற்குச் சரியாக ஒரு நாளைக்கு முன்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்குத் தொலைபேசியில் அழைத்தார். காவல் துறையிலிருந்து விலகிய பிறகு எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் நெருக்கமானது. நான் அடிக்கடி அவரிடம் அரசியல் குறித்துப் பேசுவேன். அப்போது அவர் என்னை டெல்லியிலிருந்து உடனடியாக சென்னைக்குத் திரும்பி வந்து, அவர் தொடங்கவிருந்த அரசியல் இயக்கத்தில் இணைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்”.

ரஜினியின் அழைப்பை ஏற்க மறுப்பு:

ரஜினிகாந்த் போன்ற ஒரு பெரிய ஆளுமை அழைத்த போதும், அந்தச் சமயத்தில் தனது கண் முன்னால் மூன்று மிக முக்கியமான குழப்பங்களும் காரணங்களும் இருந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அன்றைய சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு மிகவும் நல்ல விஷயமாக இருந்தது. ஆனால், அதே நேரத்தில் கோவிட் காலகட்டமாக இருந்ததாலும், அவருக்கு இருந்த உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகவும் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவரது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நல்லது என்று நான் கருதினேன்.

பாஜகவுக்கு கொடுத்த வாக்குறுதி:

நான் பாஜகவில் இணைவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சந்தோஷ் ஐயாவிடம் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஒரு முறை கொடுத்த வாக்குறுதியை எந்தச் சூழலிலும் மீறக் கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருந்தேன். இந்தக் காரணங்களால், ரஜினிகாந்த் விடுத்த அழைப்பைத் தான் முதன்முறையாக மறுக்க வேண்டியதாயிற்று என்று அண்ணாமலை உணர்ச்சிப்பொங்கக் கூறினார்.

நேரில் சென்று கேட்ட மன்னிப்பு:

“ரஜினி ஐயா பேசிய அந்த போன் காலில், ‘ஐயா என்னை மன்னிச்சுக்கங்க… என்னால உங்க கூட வர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டு, அடுத்த நாள் திட்டமிட்டபடி பாரதிய ஜனதா கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு சென்னை திரும்பியதும் சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து, அவரது அழைப்பை ஏற்க முடியாமல் போனதற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டேன். அவரும் மிகவும் பெருந்தன்மையாக அதனை ஏற்றுக்கொண்டு, தனது அடுத்தகட்ட அரசியல் பாதையைத் தீர்மானித்தார்” என்று அண்ணாமலை விவரித்தார்.

இதையும் படிக்க: அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றது பாஜக.. தலைமை சொன்னது என்ன?

ரஜினி மீது என்றும் மாறாத மதிப்பு:

இந்த விபரங்களை தான் இப்போது வெளியிடுவதற்குக் காரணம், தன்னைச் சுற்றி நிலவும் தேவையற்ற அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான் என்று அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தனக்கு இருக்கும் பெரும் மதிப்பும் மரியாதையும் என்றும் மாறாது என்றும், இந்திய அடையாளத்தோடு ஒரு பெருமைமிகு தமிழனாகத் தனது புதிய அரசியல் இயக்கத்தின் பயணத்தைத் தொடரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us