நடத்தையில் சந்தேகம்..மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை…கணவர் பரபரப்பு வாக்குமூலம்!

Vellore Crime: வேலூரில் மனைவியை கொடூரமான முறையில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய கணவரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலத்தை அந்த நபர் தெரிவித்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்..மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை...கணவர் பரபரப்பு வாக்குமூலம்!

மனைவியை கொலை செய்த கணவர் கைது

Updated On: 

02 Jan 2026 16:14 PM

 IST

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கும் கலையரசி என்பவருக்கும் திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கருணாகரனுக்கு தனது மனைவி கலையரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், இந்த பழக்கத்தை கைவிடுமாறு கலையரசியிடம், அவரது கணவர் கருணாகரன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், கலையரசி கள்ள உறவை கைவிடாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு கலையரசி வீட்டில் உணவருந்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் கலையரசி எழுந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

படுக்கையில் அசைவற்று கிடந்த மனைவி

உடனே, கணவர் கருணாகரன் மற்றும் அவரது மகன்கள் கலையரசியை எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து கலையரசியின் பெற்றோருக்கு கருணாகரன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கலையரசி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. கலையரசி உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என்று கருணாகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் விஷம் கொடுத்த பெற்றோர்? விஏஓ மரணத்தில் எழுந்த சர்ச்சை

சந்தேகம் மரணம் என போலீசில் புகார்

இதில், கலையரசியின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் இது குறித்து, அவரது பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், தனது மகளின் திடீர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கருணாகரன் மீது போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியது.

கணவர் பரபரப்பு வாக்கு மூலம்

அப்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது: எனது மனைவி கலையரசி வேறு ஒருவருடன் கள்ள உறவில் இருந்து வந்தார். இதனை தவிர்க்குமாறு கூறியும், அவர் கேட்க மறுத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவளை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதன்படி, சம்பவத்தன்று இரவு கலையரசி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை மற்றும் கால்களில் மின்சாரத்தை பாய்ச்சி துடிக்க துடிக்க கொலை செய்தேன்.

கொலை வழக்கில் கணவர் கைது

பின்னர், அவர் உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டதாக அவளது பெற்றோரிடம் கூறி நாடகம் ஆடினேன் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கலையரசன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: பாதயாத்திரை சென்ற இரு ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…பக்தர்கள் வந்த வேனால் சம்பவம்!

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி