Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Chennai Weather: குளுகுளு கிளைமேட்.. சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை!

Chennai Rains : சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Chennai Weather: குளுகுளு கிளைமேட்.. சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை!
சென்னையில் மழைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Apr 2025 12:17 PM

சென்னை, ஏப்ரல் 16: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை (Chennai Weather) பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை புறநகரில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் மூன்று நேரத்திற்கு தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

குளுகுளு கிளைமேட்

சென்னையிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையின்று வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.  இந்த நிலையில், சென்னையில் காலை முதலே மேகமூட்டமாக இருந்தது. அதன்பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இடி, மின்னலுடன்  பலத்த மழை பெய்து வருகிறது.  எழும்பூர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல்,  ஆயிரம் விளக்கு, கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை முழுவதுமே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது கிளைமேட் குளுகுளு என்று இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை புறநகரான தாம்பரம், பெருங்களுத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை

 

மேலும், தாழ்வான  பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும்  அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2025 ஏப்ரல் 16ஆம்  தேதியான இன்று முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை தமிழக்ததில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...
மே 5 ஆம் தேதியை "வர்த்தகர்கள் நாள்" ஆக அறிவித்தார் முதல்வர்
மே 5 ஆம் தேதியை
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்...
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?...
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்...
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?...
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!...
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!...