தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்யை அறிவித்த ஆளுநர்! – வெளியான தகவல்

TVK Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்தார் ஆளுநர். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு ஆளுநர் விடுத்தார். மேலும் விஜய்யை தமிழ்நாட்டின் முதல்வராக அவர் தேர்ந்தெடுத்துள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். இது தவெக தொண்டர்களிடையே மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளதாக 

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்யை அறிவித்த ஆளுநர்! - வெளியான தகவல்

ஆளுநருடன் விஜய்

Updated On: 

09 May 2026 21:15 PM

 IST

சென்னை, மே 9 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றார். அவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தி கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை ஆதரவளித்தன. இதனையடுத்து தவெகவிற்கு ஆதரவு எம்எல்ஏகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் மே 9,  2026 அன்று தனது ஆதரவு கட்சி தலைவர்களுடன் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு ஆளுநர் விடுத்தார். மேலும் விஜய்யை தமிழ்நாட்டின் முதல்வராக அவர் தேர்ந்தெடுத்துள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். இது தவெக தொண்டர்களிடையே மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

முதல்வராக பதவியேற்கும் விஜய்

 

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் வெளியான தகவலின் படி, சி. ஜோசப் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அறிவிக்கும் கடிதத்தைச் சமர்ப்பித்தார். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட, அவரது தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்களையும் அவர் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து தமிழக ஆளுநர், சி. ஜோசப் விஜய்யை தமிழகத்தின் முதலமைச்சராக நியமித்து, அமைச்சரவையை அமைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். நியமிக்கப்பட்டுள்ள முதல்வர், 2026 மே 13 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளுமாறு மாண்புமிகு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து அவரது பதவியேற்பு விழா, 2026 மே 10 ஆம் தேதி காலை 10 மணிக்குச் சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77375

இதனையடுத்து  மே 10, 2026 காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாடடு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் முதல்வராக பதவியேற்கிறார்.  அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகவும் அதற்கான பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி