நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern Railway announces: சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு (வண்டி எண். 20665), சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன் படி, புதிய நேர அட்டவணைப்படி திருச்சி இரவு 7 மணிக்கும், திண்டுக்கல் 7.58 மணிக்கும், மதுரை 8.45 மணிக்கும் சென்று சேரும்.

நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில் நேரத்தில் மாற்றம்

Updated On: 

01 Jan 2026 08:46 AM

 IST

சென்னை, ஜனவரி 1: நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரயில்களின் நேர அட்டவணை இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட பல்வேறு ரயில்களின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் மற்றும் பல்வேறு வழித்தடங்களில் நடந்து வந்த மின்மயமாக்கல் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதைதொடர்ந்து, புதிய ரயில்கள், சிறப்பு ரயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களுடன் புதிய ரயில்வே கால அட்டவணை வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ஓடும் ரயிலில் வெளிமாநில இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம்…வடக்கு மண்டல ஐஜி விளக்கம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு:

அந்தவகையில், தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இன்று (ஜன.1ம் தேதி) முதல் சென்னை எழும்பூர்–மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி–திண்டுக்கல் டெமு ரயில், மதுரை–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர்–நெல்லை வந்தே பாரத் ரயில்களுக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,

நெல்லை வந்தே பாரத் ரயில் மாற்றம்:

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு (வண்டி எண். 20665), சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன் படி, புதிய நேர அட்டவணைப்படி திருச்சி இரவு 7 மணிக்கும், திண்டுக்கல் 7.58 மணிக்கும், மதுரை 8.45 மணிக்கும், விருதுநகர் 9.20 மணிக்கும், கோவில்பட்டி 9.48 மணிக்கும், நெல்லை இரவு 11 மணிக்கும் சென்று சேரும்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றம்:

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) புதிய நேர அட்டவணைப்படி, எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 1.40, செங்கல்பட்டு 2.08, விழுப்புரம் மாலை 3.30, விருத்தாச்சலம் 4.14, அரியலூர் 4.49, ஸ்ரீரங்கம் 5.30, திருச்சி 6.05, மணப்பாறை 6.39, திண்டுக்கல் இரவு 7.17, சோழவந்தான் 7.49, மதுரை இரவு 8.35 மணிக்கு சென்று சேரும்.

மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

இதையும் படிக்க: ஜனவரி 1 முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிப்பு – பயணிகள் கடும் அதிருப்தி

டெமு ரயில் நேரம் மாற்றம்:

திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் டெமு ரயில் (76835), புதிய நேர அட்டவணைப்படி, திருச்சியில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, பூங்குடி 6.44, கொளத்தூர் 6.53, சமுத்திரம் 7.01, மணப்பாறை 7.13, செட்டியபட்டி 7.23, வையம்பட்டி 7.30, கற்பட்டிச்சத்திரம் 7.39, அய்யலூர் 7.49, வடமதுரை 7.59, தாமரையாபட்டி 8.10, திண்டுக்கல் ஜங்சன் இரவு 9.05 மணிக்கும் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!
டெல்லி குண்டுவெடிப்பில் 40 கிலோ உயர்தர வெடிப்பொருட்கள் - அமித் ஷா பகீர் குற்றச்சாட்டு
சோகத்தில் முடிந்த ஹனிமூன்.. புதுமண தம்பதி தனித்தனியே தற்கொலை!
தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..